பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

Last Updated : May 16, 2017, 09:52 AM IST
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது title=

கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.04 அதிகரிக்கப்பட்டது. 

இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.2.16, டீசல் ரூ.2.10 குறைக்கப்பட்டு இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்து உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்ததால், இந்த விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது

சென்னையில் லிட்டர் ரூ.71.07 -ஆக இருந்த பெட்ரோல் விலை தற்போது ரூ.2.16 குறைந்து ரூ.68.26 எனவும், டீசல் விலை ரூ.60.69 -ஆகா இருந்த ரூ.2.10 குறைந்து ரூ.58.07 என விற்பனை செய்யப்படுகிறது.

Trending News