இந்தியவின் இரும்பு மனிதனை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி -மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சர்தார் வல்லபாய் படேலை அவரது பிறந்த நாளுக்கு முன்னதாக நினைவு கூர்ந்தார், மேலும் அவர் செய்த பங்களிப்புகளுக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார். 

Last Updated : Oct 27, 2019, 02:29 PM IST
இந்தியவின் இரும்பு மனிதனை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி -மோடி! title=

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சர்தார் வல்லபாய் படேலை அவரது பிறந்த நாளுக்கு முன்னதாக நினைவு கூர்ந்தார், மேலும் அவர் செய்த பங்களிப்புகளுக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார். 

தீபாவளியுடன் இணைந்த ஞாயிற்றுக்கிழமை தனது மாத ஒளிபரப்பு நிகழ்ச்சியான 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த நிகழ்வில் தனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொண்டார். இன்றைய நிகழ்ச்சியானது ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படும் 'மான் கி பாத்' இன் 58-வது அத்தியாயமாகும்.

இந்திய இரும்பு மனிதனின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதியை நாட்டிற்கு நினைவுபடுத்திய மோடி, "மக்களை ஒன்றிணைக்கும் அரிய குணத்தை சர்தார் படேல் கொண்டிருந்தார், அவருடன் கருத்தியல் உடன்பாட்டில் இல்லாத மக்களுடன் சமநிலையை ஏற்படுத்த முடிந்தது." என பெருமிதம் தெரிவித்தார்.

"ஹைதராபாத் மற்றும் ஜுனகத் போன்ற சில பெரிய இடங்களை ஒன்றிணைக்கும் சர்தார் படேலின் முயற்சிகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால், லட்சத்தீவு போன்ற சிறிய இடங்களிலும் அவர் கவனம் செலுத்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?..." என்று அவர் மேலும் தனது உரையில் குறிப்பிட்டார். பிரதம அமைச்சர் சர்தாரை ஒரு 'விரிவான மனிதர்' என்று நினைவு கூர்ந்தார் மற்றும் 1921-ன் ஒரு தொடர்ச்சி கதையை அவர் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர்., அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் சர்தார் படேல் எடுத்த முயற்சிகள் தங்களுக்கு நினைவிருக்கிறது, சர்தார் படேல் விரும்பியதைப் போல எப்போதும் ஒற்றுமையின் உணர்வை நாம் வளர்ப்போம் என கேட்டுக்கொண்டார்.

சர்தார் படேலின் நினைவேந்தலான 'ஒற்றுமை சிலை' அதன் முதல் ஆண்டில் 26 லட்சம் சுற்றுலாப் பயணிகளை பெற்றதாகவும் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.

"உலகின் மிக உயர்ந்த சிலை வைத்திருப்பதன் பெருமை ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை அளிக்கிறது; ஒவ்வொரு இந்தியரின் தலையும் இதன் மூலம் உலகளவில் உயர்ந்துள்ளது. ஒரு வருடத்தில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 'ஒற்றுமை சிலைக்கு' வருகை தந்ததை நீங்கள் அறிந்து மகிழ்ச்சியடைவீர்கள்" என குறிப்பிட்டு பேசினார்.

சியாச்சின் பனிப்பாறை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட இந்திய ராணுவ ஜவான்களுக்கு தனது உரையின் மூலம், பிரதமர் மோடி அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். "பனிப்பாறையாக சியாச்சின் ஆறுகள் மற்றும் தூய்மையான நீரின் ஆதாரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, இங்கு தூய்மைப் பிரச்சாரத்தை நடத்துவது என்பது தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சுத்தமான தண்ணீரை உறுதி செய்வதோடு நுப்ரா, ஷியோக் போன்ற நதிகளின் நீரையும் பயன்படுத்துகிறது," என அவர் குறிப்பிட்டார்.

நவம்பர் மாதம் எதிர்பார்க்கப்படும் ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் தகராறு தொடர்பான தீர்ப்புக்கு முன்னதாக ஒரு செய்தியில், பிரதமர் மோடி 2010 செப்டம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அனைவராலும் மதிக்கப்படுகிறது என்பதையும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்பதையும் நினைவு கூர்ந்தார். "இந்திய மக்கள், சமூக அமைப்புகள், புனிதர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து மதங்களின் தலைவர்களுக்கும் நன்றி, இது ஒற்றுமையை வளர்த்த ஒரு நாளாக மாறியது, நீதித்துறையும் மதிக்கப்பட்டது" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Trending News