PM Modi Speech: தூங்குமூஞ்சி! ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்து கிண்டலடித்த பிரதமர் மோடி

PM Modi in Lok Sabha: மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் தோன்றுவதாலும் அல்ல... நாட்டு மக்களுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்துள்ளதால் மக்கள் நம்புவதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2023, 06:02 PM IST
  • அதானி விவகாரத்தில் ராகுல் காந்தியை போட்டுத் தாக்கிய பிரதமர் மோடி
  • குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர்
  • காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வே நடக்கிறது
PM Modi Speech: தூங்குமூஞ்சி! ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்து கிண்டலடித்த பிரதமர் மோடி title=

நியூடெல்லி: மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் தோன்றுவதாலும் அல்ல... நாட்டு மக்களுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்துள்ளதால் மக்கள் நம்புவதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாகப் பேசினார். இன்று மக்களவையில் பேசிய பிரதமர் மோடி: 'சிலர் நன்றாக தூங்கியிருக்கலாம், இன்று எழுந்திருக்க முடியாமல் போயிருக்கலாம்' என ராகுல் காந்தியின் பேச்சுக்கு கிண்டலும் கேலியுமாய் பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் 

நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரை நிகழ்த்தினார்.

அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (பிப்ரவரி 8) பதிலளித்தார்.

ராகுல் காந்திக்கு பதிலடி

ராகுல் காந்தியின் பேச்சை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, “சில ஆதரவாளர்கள் குதிக்கிறார்கள். இவரின் பேச்சால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்புமே அதிர்ந்துபோய் இருக்கிறது என்கிறார்கள்.அவரும் நன்றாக தூங்கியிருக்க வேண்டும் என்று ராகுல் காந்தியை கிண்டல் செய்த மோதி,. இன்று எழுந்திருக்க கூட முடியாமல் போயிருக்கலாம் என்று பூடகமாய் பேசினார்.

அதானி விவகாரத்தை வைத்து, மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நினைப்பு வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசினார்.

மேலும் படிக்க | Rahul Gandhi: யாரும் வற்புறுத்தல! அதானி தொடர்பான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை மறுக்கும் GVK

 ஊழலில் இருந்து நாடு விரும்பிய சுதந்திரம்

இந்தியில் கவித்துவமாகப் பேசிய பிரதமர் மோடி, பெரிய ஊழலில் இருந்து நாடு விரும்பிய சுதந்திரம் கிடைத்து வருகிறது என்று காங்கிரஸை மறைமுகமாய் தாக்கினார்.

குடியரசுத் தலைவர் முர்முவின் உரை

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7) குடியரசுத் தலைவர் முர்முவின் உரையின் மீதான விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, தொழிலதிபர் கெளதம் அதானியின் சொத்துக்களில் பெரும் அதிகரிப்பு மற்றும் மோடி அரசாங்கம் 2014 இல் ஆட்சிக்கு வந்ததற்கும் தொடர்புபடுத்தி பேசியதற்கான பதிலடியாய் பிரதமரின் பேச்சு இருந்தது.

'தப்பிச்செல்ல முயற்சி'
அதிபர் முர்மு, நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருந்தது என்று தெரிவித்த பிரதமர். பழங்குடி சமூகத்தின் மீதான வெறுப்பும் இதற்கு முன் காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களை டிவி முன் பேசியபோது, ​​பின்னர் கடிதம் எழுதி தப்பிக்க முயற்சி நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து உற்சாகப்படுத்திய முதலமைச்சர்

ஹார்வர்ட் படிப்பு

இங்குள்ள சிலருக்கு ஹார்வர்ட் படிப்பின் மீது மோகம் உண்டு. கோவிட் காலத்தில், இந்தியாவில் பேரழிவு குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. பல ஆண்டுகளாக ஹார்வர்டில் ஒரு முக்கியமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று கூறிய பிரதமர் மோடி, அந்த ஆய்வின் கருஅப்பொருள் 'இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி' என்று தெரிவித்தார்.

ஆணவத்தில் குடித்துவிட்டு, தனக்கு மட்டுமே அறிவு இருக்கிறது என்று நினைப்பவர்கள், மோடியை தவறாக பயன்படுத்தினால்தான் ஒரு வழி வரும் என்றும், மோடி மீது பொய்யான, முட்டாள்தனமான சேறு பூசினால்தான் பாதை அமையும் என்றும் நினைக்கிறார்கள். 22 வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு தவறான எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் தொலைநோக்கு உரை, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வழிகாட்டியுள்ளது என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் படிக்க | சினிமா பாணியில் வாடகை லாரி டெண்டர்: டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள்

வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள்

கலந்துரையாடலில் ஒவ்வொருவரும் தங்களின் சொந்த புள்ளிவிபரங்களையும் வாதங்களையும் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். அவரவர் ஆர்வத்துக்கும், போக்குக்கும், இயல்பிற்கும் ஏற்ப அவர் வார்த்தைகளைக் கொட்டுவார்கள். அவற்றை புரிந்துக் கொள்வது ஒன்றும் கடினமானதல்ல என்ற அர்த்தத்தில் பிரதமர் பேசினார்.  

ராகுல் காந்தி என்ன சொன்னார்?
2014-ம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்த அதானி, இரண்டாம் இடத்திற்கு வந்தார். இந்த மேஜிக் வெற்றி எப்படி ஏற்பட்டது என்றும், இந்திய பிரதமர் மோடிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்றும் மக்கள் கேட்டதாக ராகுல்காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.  

அதானிக்காக விமான நிலைய விதிகள் மாற்றப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். விமான நிலைய வணிகத்தில் இல்லாதவர்கள் விமான நிலைய பராமரிப்புப் பணியை எடுக்கமுடியாது என்ற விதிமுறைகளை அதானிக்காக மாற்றியது இந்திய அரசு என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | EMI Hike: வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன்கள் அதிகரிக்கும்! ரெப்போ ரேட் உயர்ந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News