தென்கொரியாவில் மோடிக்கு 'பாரத் மாதா கி ஜெய்' கோஷங்களுடன் வரவேற்ப்பு!!

இரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள விரிப்புடன் அமோக வரவேற்பு!!

Last Updated : Feb 21, 2019, 08:30 AM IST
தென்கொரியாவில் மோடிக்கு 'பாரத் மாதா கி ஜெய்' கோஷங்களுடன் வரவேற்ப்பு!! title=

இரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள விரிப்புடன் அமோக வரவேற்பு!!

டெல்லியில் இருந்து நேற்று இரவு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி சியோல் நகருக்குப் புறப்பட்டார். வெளியுறவு துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி வைத்தனர்.

தென்கொரியா நாட்டுக்கு பிரதமர் மோடி செல்வது இது இரண்டாம் முறையாகும். இருநாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்துவது தமது பயணத்தின் இலக்கு என்று தெரிவித்துள்ள பிரதமர், இந்தப் பயணத்தின் போது சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பை ஏற்று தாம் பயணிப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்குமான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் வசிக்கும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழில்முனைவோரிடையே பிரதமர் கலந்துரையாடுவார். இந்தியா-கொரியா தொழில்கூடத்தையும், யான்செய் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலையையும் அவர் திறந்து வைப்பார். பிரதமர் மோடிக்கு சியோல் அமைதிப் பரிசு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று காலை சியோல் சென்றடைந்த மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி விமான நிலையத்தில் மோடியை வரவேற்க 'பரத் மாதா கீ ஜே' என்ற கோசங்களை கூறியும் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த லோட்டே தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Trending News