புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (மார்ச் 7) உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். மேலும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியர்களை, குறிப்பாக மாணவர்களை வெளியேற்றுவதற்கு வசதி செய்த உக்ரைன் அதிகாரிகளுக்கு இந்திய பிரதமர் நன்றி தெரிவித்தார் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
இரு தலைவர்களுக்கும் இடையே 35 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நீடித்தது.
“பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். சுமார் 35 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு நீடித்தது. உக்ரைனில் உருவாகி வரும் சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான நேரடி உரையாடல் தொடர்வதை பிரதமர் பாராட்டினார்” என்று அரசாங்க வட்டாரங்கள் ஏஎன்ஐ இடம் தெரிவித்தன.
உக்ரைனில் இருந்து இந்திய பிரஜைகளை வெளியேற்றுவதற்கு உக்ரைன் அரசாங்கம் வழங்கிய உதவிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். சுமியில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் உக்ரைன் அரசாங்கத்திடம் இருந்து தொடர்ந்து ஆதரவை பிரதமர் கோரினார் என்று ஏஎன்ஐ மேலும் கூறியது.
மேலும் படிக்க | Russia vs Ukraine: போரை நிறுத்த நாட்டாமை செய்யும் இந்திய சாமியார்! வீடியோ வைரல்...
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்கள் ஒரு புறம் இருக்க, இந்த விவகாரத்தில் புது டெல்லி ஈடுபட்டு இரு நாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என உக்ரேனிய வெளியுறவுத் துறை அமைச்சர் உட்பட உக்ரேனிய தரப்பு கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில், இன்றைய அழைப்பு நடந்துள்ளது.
வார இறுதியில், உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினை அணுகி தனது நாட்டில் நடந்து வரும் படையெடுப்பை நிறுத்துமாறு கூற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுவரை இரண்டு முறை ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிப்ரவரி 24 அன்று அதிபர் புதினுடனான தனது முதல் உரையாடலின் போது, வன்முறையை நிறுத்திவிட்டு தூதாண்மை பேச்சுவார்த்தைகளின் பாதைக்குத் திரும்புமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் படிக்க | 'போரை நிறுத்த புடினுக்கு உத்தரவிட முடியுமா?' : மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR