'போரை நிறுத்த புடினுக்கு உத்தரவிட முடியுமா?' : மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான மனு மீதான விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம்,  'போரை நிறுத்த புடினுக்கு உத்தரவிட முடியுமா?' என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2022, 02:42 PM IST
  • விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
  • இந்தியத் தூதரகம், மாணவர்கள் உட்பட அனைத்து குடிமக்களையும் உடனடியாக கார்கிவ்வை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்தது.
  • ஒவ்வொரு குடிமகனையும் இந்திய அரசு பத்திரமாக அழைத்து வரும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி
'போரை நிறுத்த புடினுக்கு உத்தரவிட முடியுமா?' : மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி title=

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து எட்டாவது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் விவகாரம் தொடர்பான மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, விசாரணையின் போது, ​​இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று மனுதாரரிடம் தலைமை நீதிபதி கேட்டார்.

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் விரைந்து மீட்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த  உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும், மாணவர்களின் இந்த நிலைமை மன வருத்தத்தையும் தருகிறது, ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை நிறுத்த வேண்டும் என உச்ச நீதி மன்ற உத்தரவிட முடியுமா? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க, வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி, இந்திய அரசுக்கு வழிகாட்டுமாறு முறையிட்டார். இதுகுறித்து தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு  கூறுகையில், இந்தியர்களை வெளியேற்றும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. என்றார். தற்போது இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை அழைத்து நீதிமன்றம் உதவி கோரியுள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் மீண்டும் பேசினார், உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து  அவர் விவாதித்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "இரு தலைவர்களும் உக்ரைனின் நிலைமையை மதிப்பாய்வு செய்தனர், குறிப்பாக கார்கிவில் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து பிரதமர் பேசினார்" என்று PMO தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

சுமார் 20,000 இந்தியர்களில் 6,000 பேர் இதுவரை தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைனில் நிலவும் மோசமான நிலையைக் கண்டு, அங்குள்ள இந்தியத் தூதரகம், மாணவர்கள் உட்பட அனைத்து குடிமக்களையும் உடனடியாக கார்கிவ்வை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பை கருத்தில் வைத்து, இந்திய குடிமக்கள் பெசோசின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்காவ் ஆகிய பகுதிகளை உடனடியாக அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள ஒவ்வொரு குடிமகனையும் இந்திய அரசு பத்திரமாக அழைத்து வரும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News