உத்தரபிரதேச சட்டசபை வளாகத்தில் எதிர்கட்சி தலைவரின் இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருள் சிக்கியது.
உ.பி. சட்டப்பேரவையில் தினமும் பாதுகாப்பு சோதனை நடைபெறுவது வழக்கம். அதேபோல, இன்று பாதுகாப்பு சோதனையின் போது வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் சக்தி வாய்ந்த வெடி மருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பு மற்றும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிறைந்த உ.பி. சட்டப்பேரவையில் பெரும் சேதத்தை விளைவிக்கும் சக்தி வாய்ந்த பெனட்டரி திரிடோல் டெட்ரநைட்ரேட் (PETN) வகையை சேர்ந்தது வெடிபொருள் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
உ.பி. சட்டப்பேரவையில் பாதுகாப்பை மீறி வெடிபொருள் எப்படி கொண்டு வரப்பட்டது? இது பயங்கரவாதிகளின் சதி திட்டமா? அல்லது அரசியல் ரீதியிலான பலி தீர்க்கும் செயலா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் யோகி ஆதிநாத் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.