உத்திரபிரதேச மாநிலம் பிரியாக்ராஜ் மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற கும்பமேளா கோலாகலமாக துவங்கியது, லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிந்து புனித நீராடினர்.
பிரியாகராஜ் என பெர்மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தின் முதல் கும்பமேளா இன்று(ஜனவரி 15) துவங்கி வெகு விமர்சையாக நடைபெறுகிறது. உலக புகழ்பெற்ற இவ்விழாவை முன்னிட்டு ₹4300 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் 250சதுர கிமி பரப்பளவில் தனிவொரு தற்காலிக நகரத்தினை ஏற்பாடு செய்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என பிரகடனம் செய்யப்படும் கும்ப மேளா UNESCO-வின் உலக பாரம்பரியத் தகுதியைப் பெற்றுள்ளது. 'மனிதகுலத்தின் அருவமான கலாச்சார மரபு' பட்டியலில் இந்த கும்பமேளா சேர்க்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் கும்பமேளாவில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Waves of faithfuls descend on #Prayagraj to participate in first #ShahiSnan of #PrayagrajKumbh2019
Photo Courtesy: Chote Lal pic.twitter.com/d9Zh4N6u0j
— PIB India (@PIB_India) January 15, 2019
உலக புகழ் பெற்ற இந்த விழாவில் கலந்துக்கொள்ள சுமார் 5000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு கும்பமேளாவிற்கு 12 கோடி பக்தர்கள் வரை வருகை புரிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தாயகம் வரும் மக்களுக்கு ஏதுவாக உலகின் மிக பெறிய தற்காலிக குடியிறுப்பு கிராமத்தை உருவாக்க உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவுசெய்துள்ளார்.
அதேப்போல் பிரியாகராஜ் வரும் மக்களின் பாதுக்காப்பு பணிக்காக, சுமார் 20,000 சைவ காவலர்களை பயன்படுத்த உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.