ஆம்பன் சூறாவளி சேதத்தை பார்வையிட வான்வழிப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர்!

நாட்டின் இரு பெரும் மாநிலங்களில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி சென்ற ஆம்பன் சூறாவளியை அடுத்து பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்குச் செல்வார் என பிரதமர் அலுவலக தகவல் தெரிவிக்கிறது.

Last Updated : May 22, 2020, 08:01 AM IST
ஆம்பன் சூறாவளி சேதத்தை பார்வையிட வான்வழிப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர்! title=

நாட்டின் இரு பெரும் மாநிலங்களில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி சென்ற ஆம்பன் சூறாவளியை அடுத்து பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்குச் செல்வார் என பிரதமர் அலுவலக தகவல் தெரிவிக்கிறது.

பிரதமர் வான்வழி ஆய்வுகளை மேற்கொண்டு மறுஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பார் எனவும், அங்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான அம்சங்கள் விவாதிக்கப்படும் எனவும் இந்த அறிவிப்பு மேலும் குறிப்பிடுகிறது.

இதுதொடர்பான ஒரு ட்வீட்டில், பிரதமர் அலுவலகம்., "பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்குச் சென்று ஆம்பன் சூறாவளியை அடுத்து மாநிலத்தின் நிலைமையைப் பற்றிப் பேசுவார். அவர் வான்வழி ஆய்வுகளை மேற்கொண்டு மறுஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பார் , நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம்பன் சூறாவளியால் மேற்கு வங்கத்தில் 72 பேர் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளை அடித்து நொறுக்கி, பாலங்களை உடைத்து, தாழ்வான பகுதிகளை சதுப்பு நிலமாக மாற்றியுள்ளது இந்த ஆம்பன் புயல். இது ஒடிசாவில் பல கடலோர மாவட்டங்களில் மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு உள்கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளது.

மிகவும் கடுமையான சூறாவளி புயல் பலவீனமடைந்து வங்கதேசத்திற்கு நகர்ந்துள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று பிரதமர் மேற்கொள்ளும் பயணம், மார்ச் 24 நள்ளிரவில் கொரோனா வைரஸ் பூட்டுதல் விதிக்கப்பட்ட பின்னர் தேசிய தலைநகருக்கு வெளியே பிரதமரின் முதல் விஜயம் ஆகும்.

செய்தி நிறுவனமான PTI அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி, பிரதமர் முதலில் மேற்கு வங்கத்தை காலையில் பார்வையிடுவார், பின்னர் மதியம் ஒடிசாவுக்கு செல்வார் என்று குறிப்பிட்டுள்ளது. வியாழக்கிழமை தொடர் ட்வீட்டுகளில், ஆம்பன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் எந்தக் கல்லும் விடப்பட மாட்டாது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். "ஆம்பன் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு குறித்து மேற்கு வங்கத்திலிருந்து காட்சிகள் வந்துள்ளன" என்றும் பிரதமர் ட்வீட் செய்திருந்தார்.

இந்த சவாலான நேரத்தில், ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது, என்று குறிப்பிட்ட அவர், "மாநில மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை. இயல்புநிலையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று அவர் கூறினார். தேசிய பேரிடர் மறுமொழி படை குழுக்கள் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"உயர்மட்ட அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர், மேலும் மேற்கு வங்க அரசாங்கத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் எந்தவொரு செயலும் விடுப்படாது" என்று அவர் கூறினார். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதி செய்வதற்காக அதிகாரிகள் தரையில் செயல்பட்டு வருகின்றனர். "நிலைமை விரைவாக இயல்பாக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending News