''இரு நாட்டு உறவையும் முன் எடுத்து செல்வதற்கான சந்திப்பு" -இஸ்ரேல் பிரதமர் பெருமிதம்!!

இந்திய வருகையால் இரு நாட்டின் தொழில்நுட்பம், விவசாயம் மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒத்துழைப்பு ஏற்படும் என்று பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.

Last Updated : Jan 15, 2018, 12:28 PM IST
''இரு நாட்டு உறவையும் முன் எடுத்து செல்வதற்கான சந்திப்பு" -இஸ்ரேல் பிரதமர் பெருமிதம்!! title=

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடி மிகப்பெரும் தலைவர் என்று புகழாரம் சூட்டினார்.

இந்திய வருகையால் இரு நாட்டின் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உலகை மாற்றும் விஷயங்களில் மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒத்துழைப்பு நல்கப்படும் என்றும் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு முதலில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். அதன்பிறகு நேற்று இரவு பிரதமர் மோடி அவருக்கு விருந்தளித்தார்.

அதை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்திய பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், பிரதமர் மோடி மிகப்பெரும் தலைவர் என்றும் வர்ணித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில்;- இந்தியா அதன் சொந்த விருப்பங்களை தேர்வு செய்யட்டும். எனினும் பயங்கரவாதத்தை கையாள இரண்டு வழிகள் உள்ளன. உளவுத்தகவலின் அடிப்படையில் பயங்கரவாத செயலை தடுக்க வேண்டும் இரண்டாவது, கொலைகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்றார்.

இருப்பினும், பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலுக்கும் ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார்.“ நான் வெளியுறவுதுறை மந்திரியாகவோ அல்லது தூதரக அதிகாரியாகவோ ஆவதற்கு முயற்சிக்கிறேன்” என பதிலளித்தார். மேலும், இந்திய பிரதமர் மோடி, மிகப்பெரும் தலைவர் எனவும், தனது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக கடுமையாக உழைக்கிறார் எனவும் தெரிவித்தார்.

அதன் பின், டெல்லியில் இன்று நடைபெற்ற உள்ள பல்வேறு அரசு துறை சார்ந்த கூட்டங்களில் பெஞ்சமின் நேதன்யாகு கலந்து கொண்டார், அவர் வரவையொட்டி பிரதமர் மோடி அவரை வரவேற்றார்.

இவ்விழாவில், கலந்து கொண்டு பேசிய பெஞ்சமின் நேதன்யாகு;-

ஜெருசலம் விவகாரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக ஐநாவில் வாக்களித்தாலும் இந்திய இஸ்ரேல் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், மேலும் அவர், தனது இந்திய வருகையால் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உலகை மாற்றும் விஷயங்களில் மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒத்துழைப்பு நல்கப்படும் என்றார்.

"உண்மையில் இந்தியா ஜெருசலமை தலைநகராக்கும் அறிவிப்பிற்கு ஆதரவாக வாக்களித்தது எங்களுக்கு வருத்தமான விஷயம் தான், ஆனால் என்னுடைய வருகை என்பது இரு நாட்டு உறவையும் முன் எடுத்து செல்வதற்கான சந்திப்பு" என்று கூறியுள்ளார்.

கடந்த மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக்கும் முடிவை அறிவித்தார். இது தொடர்பாக ஐநா பொதுசகையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 127 நாடுகள் இந்தியா உள்பட 127 நாடுகள்இந்தியா உள்பட 127 நாடுகள்இந்தியா உள்பட 127 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவர், தங்கள் நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கக் கூடிய பொறுமையான குணம் படைத்தவர் என்றார்.

Trending News