இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில், 33 மாவட்டங்கள், 182 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலதிற்கு வருகிற டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதில்,முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும்-இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் 30-க்கும் மேற்பட்ட பொதுகூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்;-காங்கிரசின்ஆட்சியில் இருக்கும் போது சட்டம் ஒழுங்கு, வன்முறை,சீர்கேடு,வறுமை,போன்றவை மேலோங்கி காணப்பட்டது நினைவில் இருக்கிறதா? என்றும் பா.ஜ.க. மாறியது மட்டுமல்லாமல், குஜராத் முழுவதிலும் ஒரு மாற்றம் ஏற்ப்பட்டது. என்றும் தெரிவித்துள்ளார்.
My problem with Congress politics is simple- they oppose us just for the sake of opposing. They oppose things like bullet train only because they could not take this initiative forward and are envious someone else is: PM Modi in Bharuch pic.twitter.com/FSGH6bI7dw
— ANI (@ANI) December 3, 2017
இன்று காலை குஜராத் மாநிலத்துக்கு வந்த அவர் நன்பகல் வரை கட்ச் மற்றும் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற இரு தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இன்று பத்துக்கும் மேற்பட்ட பொதுகூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி நாளை வரை சுமார் 30 பொதுகூட்டங்களில் பங்கேற்கும் வகையில் அவரது பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.