புதுடில்லி: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மிகப்பெரிய அறிவிப்பை அறிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியது,
2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், ஏழை குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ஆண்டுதோறும் ரூ .72 ஆயிரம் செலுத்தப்படும். இதன்மூலம் இந்தியாவின் 20 சதவிகிதம் ஏழை குடும்பங்கள் பயன் பெரும். இந்த குறைந்தபட்ச அடிப்படை வருமானம் உத்தரவாத திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களின் கணக்குகளில், இந்த நிதிகள் டெபாசிட் செய்யப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 5 கோடி குடும்பங்கள், அதாவது 25 கோடி மக்களுக்கு நன்மை அடைவார்கள் என்று அவர் கூறினார். உலகின் எந்த நாட்டிலும் இதுபோல ஒரு திட்டம் இல்லை.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.