இந்தியாவின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியாய யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக இன்று உத்தர பிரதேசத்தில் இருந்த அவர், மாலையில், தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை விட்டு வயநாடு சென்றார். உத்தர பிரதேசத்தில் யாத்திரை மேற்கொண்டு இருந்த அவர், தனது மக்களவைத் தொகுதியான வயநாடிற்கு திடீரென புறப்பட்டு சென்றார். வயநாடு பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலால் ஏற்படும் பிரச்சனைகள்தான் ராகுல் காந்தியின் திடீர் பயணத்திற்கு காரணமாக கூறப்படுகின்றது. ராகுல் காந்தி நாளை மதியம் தனது யாத்திரையை பிரயாக்ராஜிலிருந்து மீண்டும் தொடங்குவார் என்று கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக குருவா தீவில் பணியில் இருந்த வனத்துறையின் ஈகோ-டூரிசம் கைட் ஒருவர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிறகு, உடனடியாக அங்கு செல்ல ராகுல் காந்தி (Rahul Gandhi) முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலையில் நடந்த காட்டு யானைகளின் தாக்குதலில் காயப்பட்ட நபர்களில் அந்த அதிகாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி வயநாட்டில் இப்போது இருப்பது அவசியம்: ஜெயராம் ரமேஷ்
தற்போது ராகுல் காந்தி வயநாட்டில் (Wayanad) இருப்பது மிகவும் அவசியம் என்பதால் அவர் அங்கு விரைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார். பிப்ரவரி 18ஆம் தேதி பிரயாலக்ராஜில் 3 மணி அளவில் அவர் தனது யாத்திரையை மீண்டும் தொடர்வார் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இப்படி ஒரு பஞ்சாயத்தா? பெயரில என்ன இருக்கு? சிங்கமா இருந்தாலும் பேர் பிரச்சனை தான்!
மாவட்ட அளவிலான வேலை நிறுத்தம்
இதற்கிடையில் சனிக்கிழமை அன்று ஆளும் எல்டிஎஃப் கட்சி, எதிர்க்கட்சியான யூடிஎஃப் மற்றும் பாஜக (BJP) ஆகியவை மாவட்ட அளவிலான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. கடைகளும் பிற வணிகங்களும் மூடி இருந்ததாலும், பல வாகனங்கள் சாலைகளில் காணப்படாததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டது.
பாரத் ஜோடோ யாத்திரை
நீதியின் செய்தியை பரப்பவும் சாமானிய மக்களுடன் இணையவும் நடத்தப்பட்டு வரும் பாரத ஜோடோ நியாய யாத்திரையின் (Bharat Jodo Nyay Yatra) ஒரு பகுதியாக ராகுல் காந்தி தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ளார். இதன் பிறகு அவர் ராஜஸ்தான் செல்வார். உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேஷ் திவாரி, ராகுல் காந்தியின் திடீர் வயநாடு விஜயம் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த சில பகுதிகளுக்கு அவர் செல்ல மாட்டார் என்று கூறினார். எனினும், நாளை மதியம் முதல் இந்த யாத்திரை மீண்டும் தொடரும் என்று அவர் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம் ராகுல் காந்தி ப்ரயாக்ராஜில் யாத்திரையில் மீண்டும் இணைவார் என்றும் அவர் கூறினார். மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ நீதி யாத்திரை 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6700 கிலோ மீட்டரை கடந்து மும்பையில் நிறைவு பெறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ