கேரளாவின் வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, அத்தொகுதி MP ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வயநாடு கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தனது சொந்த பாராளுமன்ற தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ദുരിതാശ്വാസ ക്യാമ്പുകളിൽ കഴിയുന്ന പ്രളയബാധിത കുടുംബങ്ങളോട് ശ്രീ രാഹുൽ ഗാന്ധി അവരുടെ ആവശ്യങ്ങളെയും പ്രശ്നങ്ങളെയും കുറിച്ച് സംസാരിച്ചു. ദുരിതാശ്വാസ ക്യാമ്പുകളിലേക്ക് മാറാൻ നിർബന്ധിതരായതിനാൽ കുട്ടികൾക്ക് സ്കൂളിൽ പോകാൻ കഴിയുന്നില്ലെന്ന് നിരവധി പേർ അദ്ദേഹത്തോട് പരാതിപ്പെട്ടു. pic.twitter.com/2eCgHTz1QC
— Rahul Gandhi - Wayanad (@RGWayanadOffice) August 27, 2019
முதல்நாள் பயணமாக வயநாட்டில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக கடந்த ஆகஸ்டு 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.