டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய விருப்பமா என்பது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Rajiv Gandhi Assassination Case: Supreme Court asks Central Government to take a stand and make it clear within three months whether it agreed with the move of the Tamil Nadu government to remit jail sentences of seven convicts in the case, or else convey what it wants
— ANI (@ANI) January 23, 2018