விலை உயர்வு காரணமாக சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.62% ஆக உயர்ந்தது

அக்டோபரில் சில்லறை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி நிர்ணியம் செய்த இலக்கை விட அதிகமானது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Nov 13, 2019, 07:05 PM IST
விலை உயர்வு காரணமாக சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.62% ஆக உயர்ந்தது
Photo: Reuters

பெங்களூரு: இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் அக்டோபரில் 4.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இந்த சில்லறை பணவீக்கத்தை முந்தைய மாதத்துடன் (செப்டம்பர்) 3.99% உடன் ஒப்பிடும்போது, அக்டோபரில் பணவீக்க விகிதம் அதிகமாக இருந்துள்ளது என பொருளாதார ஆய்வாளர்களின் கணித்துள்ளனர். 

நவம்பர் 4 முதல் 9 வரை செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நடத்திய 39 பொருளாதார வல்லுநர்களின் கருத்துக் கணிப்பில் (Analysts) அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்க (Retail Inflation Rate) விகிதம் 4.25 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கணித்துள்ளது.

நாட்டில் பெய்த அதிகப்படியான மற்றும் கணிக்க முடியாத மழையால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு மூலம் காய்கறிகள், இறைச்சி மீன் மற்றும் முட்டை விலைகள் அதிகரித்ததால், இந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளது என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் பருவமழை தாமதமாக பெய்ததால் அறுவடையும் தாமதமானது. அதனால் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதால் பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் உயர்ந்தன.

இதன்மூலம் சில்லறை விலை பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 3.99 சதவிகிதமாக இருந்தது, இது கடந்த அக்டோபர் மாதத்தில் 4.62 சதவிகிதமாக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

பருப்பு வகைகள் உட்பட உணவுப் பொருட்கள் விலை உயர்வால் தான் நாட்டின் பணவீக்க விகிதத்தில் மாற்றம் அதிக அளவில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

சரியான நடவடிக்கைகள் மற்றும் நிதி ஊக்கத்தின் மூலம் தனிநபர் துறை மட்டத்தில் முதலீட்டு நம்பிக்கையை அதிகரிப்பதே காலத்தின் தேவை. இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நாட்டின் பொருளாதார மந்தநிலை பற்றி பல்வேறு நிபுணர்களும் வல்லுனர்களும் எச்சரித்து வரும் நிலையில், கடந்த மாதத்தில் பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தது இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி செல்வதை சுட்டி காட்டுவதாக இருக்கிறது. 

நுகர்வோர் பணவீக்கத்தை அதிகரிப்பதை கட்டுப்படுத்த நாணயக் கொள்கையை மேலும் எளிதாக்குவதற்கு மத்திய வங்கிக்கு தேவையான நடவடிக்களை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு இதுவரை ரெப்போ வீதம் அல்லது வணிக வங்கிகளுக்கு குறுகிய கால நிதியை வழங்கும் முக்கிய வட்டி வீதத்தை 135 புள்ளிகளில் (1.35 percentage points)  இருந்து குறைத்துள்ளது. 

திங்களன்று வெளியிடப்பட்ட தரவுகளில், தொழில்துறை உற்பத்தி குறியீட்டால் (Index of Industrial Production - IIP) அளவிடப்பட்ட தொழில்துறை உற்பத்தி செப்டம்பர் மாதம் மற்றும் அக்டோபர் மாதம் என்ப தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக சுருங்கியதால் நாட்டின் பொருளாதார மந்தநிலை ஆழமடைந்தது எனக் கூறப்பட்டு உள்ளது.