தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட SOP-ஐ வெளியிட்டது சுகாதார அமைச்சகம்: விவரம் உள்ளே!!

COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்த, தேர்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று திருத்தப்பட்ட SOP ஒன்றை வெளியிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 04:29 PM IST
  • தேர்வு நிலையங்களில் ஏராளமான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும், ஊழியர்களும் வருகிறார்கள்.
  • விரிவான பல புதிய வழிகாட்டுதல்கள் புதிய SOP-ல் வகுக்கப்பட்டுள்ளன.
  • தேர்வு மையத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து எந்தவொரு ஊழியர்களோ அல்லது மாணவர்களோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட SOP-ஐ வெளியிட்டது சுகாதார அமைச்சகம்: விவரம் உள்ளே!! title=

COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்த, தேர்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று திருத்தப்பட்ட SOP (தரநிலை இயக்க நடைமுறை) ஒன்றை வெளியிட்டது.

தேர்வு நிலையங்களில் (Exam Centres) ஏராளமான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும், ஊழியர்களும் தேர்வுகளின் முழு காலம் வரை அடிக்கடி வருகிறார்கள். எனவே, இந்த தடுப்புத் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவது மிக முக்கியமாகும். அதே நேரத்தில் குறிப்பிட்ட தடுப்பு நடவடிக்கைகளைப் (Preventive Measures) பின்பற்ற வேண்டியது கிக அவசியமாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நுழைவு மற்றும் வெளியேறும் நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள், தொற்று அறிகுறி உள்ள வேட்பாளர்களுக்கான நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மையங்களுக்கான நடைமுறைகள் உள்ளிட்ட விரிவான வழிகாட்டுதல்கள் புதிய SOP-ல் வகுக்கப்பட்டுள்ளன.

ALSO READ: பயங்கரமான நிலை.....நாட்டின் அனைத்து பதிவுகளையும் முறியடித்தது கொரோனா வைரஸ்!

திருத்தப்பட்டுள்ள SOP-ல் உள்ள முக்கிய அம்சங்கள்:

தேர்வு மையத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து (Containment Zones) எந்தவொரு ஊழியர்களோ அல்லது மாணவர்களோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வழிகாட்டுதல்களின்படி அறிகுறியற்ற ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு மையத்திற்குள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.

ஃபேஸ் கவர்கள், முகக்கவசங்கள், ஹேண்ட் சேனிடைசர்கள், சோப்பு, சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் போன்ற பிற தனிப்பட்ட பாதுகாப்பு விஷயங்கள் தேர்வு நடைபெறும் இடத்தில் கிடைக்கும்.

ஒழுங்கான சுவாச முறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இருமல்/தும்மலின் போது டிஷ்யூ / கைக்குட்டை / கைகளின் மேல் பக்கம் ஆகியவற்றால் கண்டிப்பாக வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

டிஷ்யூக்கள் முறையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

தேர்வு செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள், தேர்வு மையத்திற்கு நுழைந்த பிறகு தங்கள் சுகாதார நிலை குறித்த சுய அறிவிப்பை சமர்ப்பிக்கலாம்.

தேர்வு மையத்தில் நுழையும் போது ஸ்க்ரீனிங் அதாவது பரிசோதனை செய்யப்படும் நேரத்திலோ, தேர்வு எழுதும் போதோ, யாருக்கேனும் அறிகுறி காணப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்த தேர்வு மையத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறை (Isolation Room) இருக்க வேண்டும்

தேர்வு முடிந்ததும், மாணவர்கள் ஒழுங்கான முறையில் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும்.

ALSO READ: பணம் மூலம் பரவுகிறதா கொரோனா?... தெளிவுபடுத்துமாறு CAIT கோரிக்கை!!

Trending News