புதுடெல்லி: சமையல் கேஸ் சிலிண்டருக்கான கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம்.
மத்திய அரசின் செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின் பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்கள், மின்னணு முறையில் அதற்கான பணம் செலுத்தினால், 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்நிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளன.
இதன்படி, கேஸ் சிலிண்டரை ஆன்லைனில் புக் (மின்னணு முறையில்) செய்யும் வாடிக்கையாளர்கள், ஆன்லைன் வாயிலாகவே அதற்கான தொகையை செலுத்தினால் சிலிண்டருக்கான விலையில் 5 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளன.