Karnataka கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருக்கும் ஹின்டல்கா சிறை நிர்வாகம் ரூ. 500 செலுத்துவதன் மூலம் ஒரு நாள் முழுவதும் கைதியாக தங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதை இப்போது நிறைவேற்றியுள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிண்டல்கா சிறை நிர்வாகம். கர்நாடக மாநிலம் பெலாகாவியில் உள்ள ஹிண்டல்கா மத்திய சிறை அதிகாரிகள் ஒரு நாள் சுற்றுலா திட்டமாக, கைதியின் வாழ்வில் ஒரு நாள் என்ற பெயரில் ரூபாய் 500 கட்டணம் செலுத்தி 24 மணிநேரம் சிறைச்சாலையில் இருக்கலாம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒரு நாள் முழுவதும் சிறையில் எந்த சலுகைகளும் இன்றி கைதி எண், சீருடை, உணவு, சமையல், தோட்ட வேளைகள் என கைதிகள் போலவே அவர்கள் நடத்தப்படுவார்கள். இந்த முயற்சியை செயல்படுத்த அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கட்டணம் செலுத்தி உள்ளே வருபவர்கள் மற்ற சக கைதிகளை போலவே நடத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். சிறைக்காவலர்கள் பார்வையாளர்களை அதிகாலை 5 மணிக்கு எழுப்புவார்கள் என்றும் காலை தேநீர் அருந்துவதற்கு முன் தங்கள் இடங்களை அவர்கள் சுத்தம் செய்ய வேண்டுமெனவும் அதன்பிறகு காலை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
பிறகு மதிய உணவு வழங்கப்படும் அதன்பின் இரவு 7 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும் எனவும் வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டுமுறை கைதிகளுக்கு அசைவ உணவு வழங்கப்படுகிறது, பார்வையாளர்கள் வார இறுதி நாட்களில் வந்தாள் அவர்களுக்கும் அசைவ உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
ALSO READ Viral Video: ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்
பகலில் வேலைகள் முடிந்த பிறகு பார்வையாளர்கள் தரையில் மட்டுமே தூங்க வேண்டும் மற்றும் அவர்கள் ஒரு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்தனர். சிறை வாழ்க்கையை தத்ரூபமாக்க இவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
சிறைக்கு வரும் பயணிகள் சில குற்றவாளிகளுடன் உடை பழக்கங்கள் ஏற்படலாம். சிறையில் மரண தண்டனை கைதிகள், கொலை வழக்கில் உள்ள கைதிகள், வீரப்பனின் கூட்டாளிகள், கற்பழிப்பு வழக்குகளில் வந்தவர்கள் என அனைவரும் உள்ளனர். கைதிகளின் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR