ஜன் தன் கணக்குகள் மூலம் சுமார் 30 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இக்கணக்குகள் துவங்கி 3வது ஆண்டு நிறைவு பெற்றது. இக்கணக்குகளில் ரூ 65,000 கோடி வைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
ஜன் தன் கணக்குகள் மட்டுமின்றி காப்பீடு திட்டங்கள், ரூ பே அட்டைகள் போன்றவற்றின் மூலமும் மக்கள் நிறைய பயனடைந்திருகின்றனர். காப்பீடு திட்டங்கள் ஏழை மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தந்துள்ளது. மேலும் இக்கணக்குகளின் தொகை பல நாட்டு மக்கள் தொகையை விட அதிகம்.
ஏழை மனிதனும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள இத்திட்டம் வழி வகுத்துள்ளது.தனது மாதாந்தி மன் கி பாத் உரையின் ஒரு பகுதியாக இத்திட்டத்தைப் பற்றி பிரதமர் விவரித்தார்.
கணக்குகள் இருப்பதால் வங்கிக்கு செல்லும் ஏழை மனிதர் சேமிக்கவும் பழகுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் மோடி. ரூ பே அட்டை சாதாரண மனிதர்களை பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.
குடும்பத் தலைவர் மரணமடைந்தால் ரூ 2 லட்சம் ஒரு சில தினங்களில் அக்குடும்பங்களுக்கு கிடைக்கிறது. இது ஒரு ரூபாய் காப்பீட்டு தொகையின் கீழ் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் முத்ரா வங்கிக் கடன் பல எளிய மக்கள் தங்கள் தொழிலின் மூலமாக பல வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இக்கடன்களை அவர்கள் எவ்வித உத்தரவாதங்கள் இன்றிப் பெறமுடிகிறது என்பதையும் பிரதமர் மோடி எடுத்துக்கூறினார்.