படிப்பை பாதியில் விட்டால் என்ன பொழப்புக்கு போராட்டம் இருக்கே..!!!!

வேளாண் மசோதா இடைதரகர்களை  பெரிதும் பாதிப்பதால், இடைத்தரகர்கள் அதிகம் உள்ள, பஞ்சாப் ஹரியாணாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 26, 2020, 12:00 PM IST
  • வேளாண் மசோதா இடைதரகர்களை பெரிதும் பாதிப்பதால், இடைத்தரகர்கள் அதிகம் உள்ள, பஞ்சாப் ஹரியாணாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
படிப்பை பாதியில் விட்டால் என்ன பொழப்புக்கு போராட்டம் இருக்கே..!!!! title=

மத்திய அரசு (Central Government), சமீபத்தில் விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. 

இந்த வேளாண் மசோதாக்கள் (Farm Bills) விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கிறது. விவசாயிகள் இடைதரகர்கள் தலையீடு இல்லாமல், தங்கள் உற்பத்திக்கான விலைகளை தாங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்பது உட்பட விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் பல அம்சங்கள் உள்ளன. 

முதலீட்டு வசதி, தொழில்நுட்பம், பொருளாதாரம், நவீன உபகரணங்கள், சிறந்த விதைகள், சிறந்த தளவாடங்கள் மற்றும் சந்தைகளுக்கு இலவச அணுகுமுறை போன்ற அம்சங்கள் விவசாயிகளுக்குபெரிய அளவில் உதவும்.

மேலும் விளை பொருட்களுக்கான ஒப்பந்தங்கள் முன்னதாகவே போடப்படுவதால், விவசாயிகள் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. இழப்பு தவிர்க்கப்படுகிறது. இலாபகரமான பயிர்களை சுதந்திரமாக தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.

வேளாண் மசோதா இடைதரகர்களை  பெரிதும் பாதிப்பதால், இடைத்தரகர்கள் அதிகம் உள்ள, பஞ்சாப் ஹரியாணாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. 

இந்த போராட்டத்தில் உண்மையில் விவசாயிகள் தான் ஈடுபடுகிறார்களா என்ற கேள்விக்கு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரிய அளவில் போராட்டம் நடக்கும் பகுதிகளில், 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர் என கூறிக் கொள்ளும் சுமார் 30 வயதான பெண்கள், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் என பலரை போராட்டத்தில் காணலாம். 

விவசாயமே செய்யா, விவசாயிகள் பிரச்சனை பற்றி அறியாத, சமூக ஆர்வலர்கள் என கூறிக் கொள்பவர்களும், பள்ளி படிப்பை விட்டவர்களும், மத்திய அரசுக்கு எதிராக உணர்ச்சி பூர்வமாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ள பஞ்சாப், ஹரியானாவில் வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டம்!!

இந்த போராட்டத்தில் குதித்துள்ள அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்தவர்கள் முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் நடத்தும் போராட்டத்தினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும், அது குறித்து மக்களுக்கு சரியாக விளக்க வேண்டும்  கட்சித் தலைவர்களையும் தொடர்களையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். தங்கள் சுயநலனுக்காக விவசாயிகளை சிலர் தூண்டி விடுவதாக அவர் மேலும் கூறினார்.

பல ஆண்டுகளாக தங்கள் விளைச்சலுக்கான சரியான விலை கிடைக்காமல் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வந்தனர் என்றும், அந்த நிலையை போக்க அரசு தொடர்ந்து முயர்சித்து வருகிறது என்றும், அதற்கான் ஒரு முக்கிய நடவடிக்கை தான் இந்த வேளாண் மசோதாக்கள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் படிக்க | பிரிவினையில் தொலைந்தவரின் கண்ணீர் வாழ்வு....WhatsApp அழைப்பால் இணைந்தது உறவு..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News