கடும் வெயில்: ஏப்ரல் 22 முதல் புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

Last Updated : Apr 20, 2017, 02:10 PM IST
கடும் வெயில்: ஏப்ரல் 22 முதல் புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை title=

புதுச்சேரியில் நிலவும் கடும் வெயில் காரணமாக ஏப்ரல் 22-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் மூட புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஏப்ரல் 22-ம் தேதி முதல் மூடப்படும் என அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.

Trending News