பங்குச் சந்தை இன்று திறந்தவுடன் சென்செக்ஸ் 32,135 புள்ளிகளையும், நிப்டி 9,939 புள்ளிகளையும் தொட்டு சாதனை படைத்துள்ளன.
வர்த்தக பங்குச் சந்தை இன்று காலை திறந்தவுடன் 32,100.22 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. பின்னர் 32,135 புள்ளிகள் உயர்ந்தது.
கடந்த வெள்ளிக் கிழமை சென்செக்ஸ் 32,082 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 53.62 புள்ளிகள் அதிகரித்துள்ளது. 52 வாரங்களுக்குப் பின்னர் இன்று சென்செக்ஸ் உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 11 காசுகள் இறங்கி, இந்திய ரூபாயின் மதிப்பு 64.43 காசுகளாக இருந்தது. மேலும் நான்கு வாரங்களுக்குப்பிறகு தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.