பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம்

பாலியல் தொழிலும் ஒரு மதிக்கத்தக்க தொழில் தான் என்றும், பாலியல் தொழிலாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : May 27, 2022, 03:27 PM IST
  • வாயரிஸம் கிரிமினல் குற்றமே - சுப்ரீம் கோர்ட்
  • பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, அபராதம் விதிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது.
பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம் title=

கடந்த 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகி எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோரின் ஆயம் தாமாக முன்வந்து வழக்கின் தீர்ப்பை வெளியிட நினைத்தனர்.

அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த மே 19-ம் தேதி இவ்வழக்குக்கான தீர்ப்பையும் வெளியிட்டனர். அத்தீர்ப்பில் பாலியல் தொழிலாளிகளுக்கு சாதகமாக 10 அம்சங்களைக் கொண்ட தீர்ப்பு அறிக்கையை வாசித்து காண்பித்தனர்.

அவை என்னவென்றால்,

*இரண்டு வளர்ந்த நபர்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் உறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது. அவர்கள் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இயலாது.

*பாலியல் தொழிலாளர்களும் சட்டத்தின் பாதுகாப்பை பெற தகுதியானவர்களே. 

மேலும் படிக்க | திராவிட மாடல் என்றால் என்ன?... பிரதமர் மேடையில் விளக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

*பாலியல் தொழில் கூடங்களை போலீஸார் ரெய்டு செய்யும்போது பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, அபராதம் விதிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது.

* ஒருவர் தனது சுய தன்னார்வத்தில் செய்யும் பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல. ஆனால் பாலியல் கூடங்கள் நடத்துவது சட்டவிரோதம். வயது வராத குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதம். தண்டனைக்கு உரிய செயல் ஆகும்.

*ஒரு பாலியல் தொழிலாளிக்கு பிறந்த குழந்தையை அவரது தொழிலை காரணம் காட்டி அவரிடமிருந்து பிரிக்கக் கூடாது. அக்குழந்தை கடத்தப்பட்ட குழந்தை என சந்தேகம் எழுந்தால், தாய் சேய்க்கு மரபணு பரிசோதனை செய்யலாம். மாறாக குழந்தையை பிரிக்கக்கூடாது.

*பாலியல் தொழிலாளி என்பதால் அவருக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை அவர்கள் புகாரளிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக்கூடாது. அவர்களுக்கு தகுந்த மருத்துவ, சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும்.

*பாலியல் தொழிலாளிகள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. அவர்களை மதிக்க வேண்டும்.

மேலும் படிக்க | பிரதமருக்கு காவி குடை பிடிக்கும் திமுக?

*அதேபோல் பாலியல் கூடங்களில் ரெய்டு நடந்தால், அதனை ஊடகங்கள் ஒளிபரப்பும்போது கவனமாக இருக்க வேண்டும். கைது அல்லது மீட்புப் பணிகளின் போது பாலியல் தொழிலாளியின் அடையாளம், பெயர் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படக்கூடாது.

* முக்கியமாக மத்திய, மாநில அரசுகள் பாலியல் தொழில் ஒழுங்கு சட்டங்களை இயற்றும்போது, பாலியல் தொழிலாளர்களின் கருத்தையும் கேட்டறிய வேண்டும்.

*அதேவேளையில், வாயரிஸம் (Voyeurism) எனப்படும் துன்புறுத்தி இன்பம் காண்வது, சம்பந்தப்பட்டவரின் சம்மதம் இல்லாமல் அவரை இன்பத்திற்காக பயன்படுத்துவது போன்றவை கிரிமினல் குற்றம் என்பதில் நீதிமன்றத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை.

இவ்வாறு அறிவித்தனர்.

மேலும் படிக்க | Whatsapp-ல் இந்த அம்சங்கள் கூட இருக்கா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News