பிரச்சாரம் ஓய்ந்தது; இனியாவது பிரதமர் பணியை செய்யுங்கள்... ராகுல்!

பிரசாரம் ஓய்ந்தது, இனியாவது பார்ட் டைம் பிரதமர் பணிக்கு நேரம் ஒதுக்குங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார்!

Updated: Dec 6, 2018, 12:38 PM IST
பிரச்சாரம் ஓய்ந்தது; இனியாவது பிரதமர் பணியை செய்யுங்கள்... ராகுல்!

பிரசாரம் ஓய்ந்தது, இனியாவது பார்ட் டைம் பிரதமர் பணிக்கு நேரம் ஒதுக்குங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார்!

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் பிரசாரம் நேற்றோடு நிறைவடைந்தது. எனவே இனியாவது நீங்கள் பார்ட் டைமாகப் பார்க்கும் பிரதமர் வேலைக்கு நேரம் ஒதுக்குங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக கிண்டல் செய்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக குறிப்பிட்ட 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் பிஸியாக வலம் வந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வந்தார். இறுதியாக நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் தனது இறுதி பிரச்சார கூட்டத்தினை முடித்தார். இந்நிலையில் பிரதமரின் பிரச்சாரத்தினை குறித்து விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில பதிவிட்டுள்ளதாவது...

“அன்புள்ள மோடி அவர்களே... 

தற்போது பிரசாரம் முடிந்துவிட்டது. இனிமேலேனும் நீங்கள் ‘பார்ட் டைமாக’ பார்க்கும் பிரதமர் வேலைக்கு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் பிரதமராகி 1654 நாள்கள் ஆகிவிட்டன.

ஆனால், இன்னும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்காமல் உள்ளீர். அதை, ஒருநாள் முயற்சி செய்து பாருங்களேன். கேள்விகளை எதிர்கொள்வது கொண்டாட்டமாக இருக்கும்”  என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹைதராபத்தில் தான் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின் புகைப்படங்களையும் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.