நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கியது. இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை கடுமையாக எதிரொலித்தது. நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற 2 அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்தனர். இந்நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை 5 அமர்வுகளைக் கொண்ட நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.
"பாராளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் மற்றும் விவாதங்களை நடத்துவதற்கு அம்ரித் கால் காத்திருக்கிறது" என்று அவர் கூறினார். இருப்பினும், பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் வெளியிடவில்லை.
ராஜ்யசபா எம்.பி.யும், சிவசேனா (யுபிடி) தலைவருமான பிரியங்கா சதுர்வேதி சிறப்பு கூட்டத்தின் அறிவிப்புக்கு பதிலளித்து, "இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகையான விநாயகர் சதுர்த்தியின் போது சிறப்பு கூட்டத் தொடர் அழைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது" என்றார். சிறப்பு அமர்வுக்கான அழைப்பு "இந்து உணர்வுகளுக்கு எதிரானது" என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை மொத்தம் 17 அமர்வுகளுடன் 23 நாட்கள் நடைபெற்றது. இந்த அமர்வுகள் மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக ஒவ்வொரு நாளும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
முன்னதாக, ஆக்ஸ்ட் 11ம் தேதி நிறைவு பெற்ற நாடாளுமன்ற அமழை கால கூட்டத் தொடரில், அமளிக்கு மத்தியில் சில மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை, 39 மணி நேரம் இயங்கியதாகவும், தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார். மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023' மற்றும் 'ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023' ஆகியவற்றுக்கு நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் அளித்தது. முன்னதாக, தேசத்துரோக சட்டத்தை ஒழிப்பதற்கான சிஆர்பிசி சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடி 100 முறை பிரதமரானாலும் ஆட்சேபனை இல்லை! ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ரியாக்ஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ