மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Reservation Benefits To Dalits: மத்திய அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றுக்கூறி, இந்த வழக்கு அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 31, 2022, 02:40 PM IST
  • மற்ற மதங்களில் உள்ள தலித்துகள் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
  • சாதி மற்றும் தீண்டாமை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு தொடர்ந்து ஆளாகின்றனர்.
  • இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு என்பது சர்ச்சைக்குரிய விஷயம்.
மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு title=

புது டெல்லி: இந்தியாவில் மற்ற மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (செவ்வாய்கிழமை) கூறியுள்ளது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏஎஸ் ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற வழக்கின் மனு விசாரணை வந்தது. அந்த மனு மீதான 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு அரசு சாரா அமைப்பு தாக்கல் செய்த மனுவில், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் மட்டுமே பட்டியலிடப்பட்ட சாதிகளாகக் கருதப்படுவார்கள் என்று திருத்தப்பட்ட 1950 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு ஆணை அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறுகிறது. இது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு மற்றும் தீண்டாமையை கடைபிடிப்பதை காட்டுவதாகும் என பொது நல வழக்கின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் புஷன் கூறினார். 

செவ்வாயன்று நடந்த விசாரணையில், என்ஜிஓ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், 2007ல் வெளியான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி, மற்ற மதங்களில் உள்ள தலித்துகள் இந்து மதத்தில் உள்ள அதே ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றும், கிறிஸ்தவமும் இஸ்லாமும் சாதி அமைப்பையோ அல்லது தீண்டாமையையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்தியாவில் கலாச்சார யதார்த்தம் வேறுபட்டது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். "கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்துக்கு மாறிய பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள், இந்திய சமூகத்தின் ஒரு அங்கமாகத் தொடர்வதால், சாதி மற்றும் தீண்டாமை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு தொடர்ந்து ஆளாகின்றனர் என்றார்.

மேலும் படிக்க: சாதிய அடக்குமுறை: இஸ்லாம் மதத்திற்கு மாறிய 8 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர்

தலித் கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டால், கிறிஸ்தவ நிறுவனங்களில் தரமான கல்வி கிடைப்பதால், பெரும்பாலான இடஒதுக்கீடு இடங்களை அவர்களுக்கே ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் கவலையும் உள்ளது. எனவே இந்த அச்சத்தை போக்க, அந்தந்த சமூகங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய பட்டியல் சாதியினருக்கான ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது ஒரு வகையான துணை இட ஒதுக்கீடு (Sub Reservation) ஆகும் என்று பூஷன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இதற்கு நீதிபதி கவுல், "இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு" என்பது பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால் ஓபிசி (Other Backward Classes) பிரிவில் இது செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எஸ்சி (Scheduled Caste) பிரிவில் இதைச் செய்ய முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரு தலித்துக்கு மதமாற்றத்திற்குப் பிறகு அதே அந்தஸ்து இருக்குமா என்பதுதான் இந்த வழக்கின் பரந்த கேள்வி என்று கூறினார். ஒரு தலித், கிறித்தவராக மாறிய பிறகும், அவரின் சமூகநிலை சற்று மேன்மை அடைவதால் அவர்கள் தலித்துக்கான பலன்களைத் தொடர்ந்து பெறலாமா? என்பதும் கேள்வியாக உள்ளது என்றார்.

இந்நிலையில், இந்த வழக்கை தொடர்பாக மத்திய அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றுக்கூறி, இந்த வழக்கு வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு தள்ளுபடி - எதனால் ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News