புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க கூடாது -உச்சநீதிமன்றம்...

பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு வீடு திரும்புவதற்காக ரயில் அல்லது பேருந்துகளை பயன்படுத்தும் போது அவர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated: May 28, 2020, 07:52 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க கூடாது -உச்சநீதிமன்றம்...
IMAGE FOR REPRESENTATION

பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு வீடு திரும்புவதற்காக ரயில் அல்லது பேருந்துகளை பயன்படுத்தும் போது அவர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும், புலம்பெயர்ந்தோரின் பயணம் தொடங்கிய இடத்துக்கும், இலக்கு மாநிலத்துக்கும் இடையில் கட்டணம் வசூலிக்கப்படும். தங்களின் போக்குவரத்து வீட்டிற்காக காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட இடங்களில் தங்குமிடம், உணவு மற்றும் நீர் வழங்கப்படும் எனவும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின்போது, ​​அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ரயில்வே பொறுப்பாகும். இதேபோல், அவர்கள் சென்ற மாநிலங்கள் பேருந்து பயணத்தின் போது தங்கள் உணவு மற்றும் தண்ணீரை கவனித்துக்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து வசதிகள் ஏதும் இன்றி நடை பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரை அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், அங்கு அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் உதவி கியோஸ்க்களை அமைக்க நீதிமன்றம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. இந்த இடைக்கால வழிகாட்டுதல்களைத் தவிர, சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் பதிவு செய்வதற்கான திட்டங்கள் மற்றும் போக்குவரத்து குறித்த விவரங்களையும் நீதிமன்றம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. 

வீடியோ கான்பரன்சிங் மூலம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைப்பெற்ற  விசாரணையானது, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதுமான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்தை வழங்குவதில் அரசாங்கத்தின் "குறைபாடுகள்" குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.