யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. ஆனால் அது போன்ற எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது போலியானது என பாகிஸ்தான் கூறி வருகிறது.தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரத்தை இந்தியா வெளியிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. மேலும் இந்தியாவிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரசை சேர்ந்த சஞ்சய் நிருபம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதைக்குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில்:- சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான வீடியோ மட்டுமின்றி போட்டோக்களையும் வெளியிட தயாராக உள்ளோம். அது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் தான் எடுக்க வேண்டும். அதனால் பிரதமர் அலுவலக ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இந்திய படைகள் எப்படி எல்லை தாண்டி சென்றது, தரை வழியாகவும், வான் வழியாகவும் எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றி யூ.ஏ.வி.,க்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.