RIP: தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ரோசய்யா காலமானார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2021, 09:47 AM IST
  • தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்
  • 88 வயதான ரோசய்யா மருத்துவமனையில் மரணம்
  • ஆந்திர மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் கொனிஜெட்டி ரோசய்யா
RIP: தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார் title=

தமிழகத்தின் முன்னாள் ஆளுநராக பதவி வகித்த ரோசய்யா காலமானார். அவருக்கு வயது 88. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்தவருமான கொனிஜெட்டி ரோசய்யா உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இன்று காலை திடீரென குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கமடைந்த ரோசய்யாவை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது பஞ்சாரா ஹில்ஸ் நட்சத்திர மருத்துவமனையில் உள்ளது. 

காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த திரு.ரோசய்யா, எம்எல்ஏ, எம்எல்சி, எம்பி என பதவி வகித்தவர். ஒருங்கிணைந்திருந்த ஆந்திர மாநிலத்தில்  நிதி அமைச்சராகப் பணியாற்றினார். ஏழு முறை பட்ஜெட் தாக்கல் செய்து ரோசய்யா சாதனை படைத்தார். 

தமிழகம் (Tamil Nadu Government) மற்றும் கர்நாடக மாநில ஆளுநராக பதவி வகித்துள்ள ரோசய்யா, குண்டூர் மாவட்டத்தின் வெமுரு கிராமத்தில் 1933 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிறந்த ரோசய்யா, குண்டூர் இந்துக் கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். 1968, 1974, 1980 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

rosaiyia

1995-97 வரை ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (APCC) தலைவராக இருந்தார். 1998 இல் நரசராவ்பேட்டை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பல முறை பல முக்கிய இலாகாக்களின் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ள ரோசய்யா, 2009 தேர்தலுக்கு முன்னதாக சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவையில் நீண்ட அனுபவம் கொண்ட ரோசய்யா, செப்டம்பர் 3, 2009 முதல் நவம்பர் 24, 2010 வரை ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகப் பதவி வகித்தார். 2011 ஆகஸ்ட் 31ல் தமிழக ஆளுநராக ரோசய்யா பதவியேற்றார். 2016 ஆகஸ்ட் 30 வரை தமிழக ஆளுநராக பதவி வகித்தார்.

ALSO READ | CPR முதலுதவி செய்து மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ்!  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News