தெலங்கானா பெண் மருத்துவர் பலாத்காரம் வழக்கில் திடீர் திருப்பம்...

தெலங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளது!

Last Updated : Dec 21, 2019, 02:06 PM IST
  • தெலங்கானா பெண் மருத்துவர் பலாத்காரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் சுட்டு கொன்ற நிலையில், பலியானோர் சடலங்களை காந்தி மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாத்து வைக்கப்பட்டது.
  • பதப்படுத்தப்பட்ட பிரேதங்களை மீண்டும் பிரதே பரிசோதனை செய்ய தற்போது தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா பெண் மருத்துவர் பலாத்காரம் வழக்கில் திடீர் திருப்பம்... title=

தெலங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளது!

தெலங்கானா பெண் மருத்துவர் பலாத்காரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் சுட்டு கொன்ற நிலையில், பலியானோர் சடலங்களை காந்தி மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாத்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பதப்படுத்தப்பட்ட பிரேதங்களை மீண்டும் பிரதே பரிசோதனை செய்ய தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு, தெலங்கானா மாநிலம் சைபராபாத் காவல் ஆணையர் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெண் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரையும், கடந்த 6-ஆம் தேதி விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நிலையில், காவலர்களை தாக்கிவிட்டுதப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். 

இது தொடர்பாக ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா அரசும் ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் எம் பாகவத் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. என்கவுன்ட்டருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கின் அடுத்த நகர்வாக ஹைதராபாத் பாலியல் குற்றவாளிகள் என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தெலங்கானா அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று இதுதொடர்பான வழக்கில் தெலங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில்., சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Trending News