மனைவியை கொலை செய்த டெலிவிஷன் தயாரிப்பாளர்; ஆயுள் தண்டனை!!

மனைவியை கொலை செய்த வழக்கில் டெலிவிஷன் தயாரிப்பாளர் சுகைப் இலியாசிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Last Updated : Dec 20, 2017, 06:47 PM IST
மனைவியை கொலை செய்த டெலிவிஷன் தயாரிப்பாளர்; ஆயுள் தண்டனை!! title=

டெல்லியை சேர்ந்தர் சுகைப் இலியாசின் தன்னுடைய மனைவியான அஞ்சுவை வரதட்சணை கொடுமை காரணமாக கொலை செய்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 11- ந்தேதி சுகைப் இலியாசி கொடூரமாக கொலை செய்தாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக சுஹைப் போலீசில் மறுப்பு தெரிவித்தார்.அதனை ஏற்க மறுத்த அஞ்சுவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சுஹைப்பை கைது செய்த போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.அதன் பின்னர் வரதட்சணை கொடுமை காரணமாக மனைவியை அவர் கொலை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் சுகைப் இலியாசி மீது வரதட்சணை கொடுமை தொடர்பாக சாதாரண வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து அஞ்சுவின் தாயார் ருக்மா சிங் மற்றும் சகோதரி ராஷ்மி சிங் ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், சுகைப் இலியாசி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் அவரை குற்றவாளி என 14-ம் தேதி டெல்லி செசன்ஸ் கோர்ட் அறிவித்தது. இந்நிலையில், அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. மனைவியை கொடுரமாக கொன்ற குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

Trending News