உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த மாதம், பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து 4-வது வாரமாக நீடித்து வருகிறது. இந்த போரினால் உக்ரைனில் கடும் பொருட்சேதங்களும், உயிர்சேதங்களும் நிகழ்ந்து வருகிறது. மேலும், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் உடமைகளை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு `ஆப்ரேஷன் கங்கா` எனும் திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் உக்ரைனில் போர் சூழலில் சிக்கித்தவித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தாயகம் திரும்பினர். இதனிடையே, மார்ச் 1-ம் தேதி கார்கிவ் நகர் மீது ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் எதிர்பாராத விதமாக கர்நாடக மாநிலம் சலகேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.
அவரது உடல் கார்கிவ் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்த நவீனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என பெற்றோர் கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், மாணவரின் உடலை இந்திய கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.
மேலும் படிக்க | Breaking: உக்ரைன்: ரஷ்ய குண்டுவீச்சில் இந்திய மாணவர் உயிரிழப்பு
Received & honoured body of our student Naveen Gyanagoudar killed in indiscriminate bomb shelling in Russia-Ukraine war.
Thanks to PM @narendramodi Ji & @DrSJaishankar Ji for getting his mortal remains. pic.twitter.com/s8YTh2gUqP
— Basavaraj S Bommai (@BSBommai) March 20, 2022
இந்நிலையில், மத்திய அரசின் ஏற்பாடுகள் மூலம், உக்ரைனில் இருந்து நவீன் சேகரப்பாவின் உடல் விமானம் மூலம் இன்று அதிகாலை பெங்களூரு வந்தடைந்தது. அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, விமான நிலையத்துக்கே நேரில் சென்று நவீன் சேகரப்பாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் நவீனின் உடலுக்கு அவரது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து மாணவர் நவீனின் உடல் அவரது சொந்த ஊரான ஹாவேரி மாவட்டம், சலகேரி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி சடங்களுகள் முடிந்த பின்னர் நவீனின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தானமாக வழங்கப்படும் என அவரது தந்தை சங்கரப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: இந்தியா மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR