உக்ரைனில் சிக்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் மேற்கு எல்லையை அடைய எல்விவ் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, ரஷ்ய குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக ஏன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் நாளுக்கு நாள் புதிய திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அதன்பிறகு அந்நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்தியில், மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பான புகலிடங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
சுமார் 16,000 இந்தியர்கள் போர் மண்டலத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், உக்ரைனில் சிக்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் மேற்கு எல்லையை அடைய எல்விவ் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, ரஷ்ய குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் வந்துள்ளது.
Ministry of External Affairs says that an Indian student lost his life in shelling in Kharkiv, Ukraine this morning. The Ministry is in touch with his family. pic.twitter.com/EZpyc7mtL7
— ANI (@ANI) March 1, 2022
அந்த மாணவரின் பெயர் நவீன் என்றும், அவர் உக்ரைனில் படித்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. நவீன் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது அவர் மேற்கு எல்லையை அடைவதற்காக எல்விவ் நகருக்கு செல்ல ரயில் நிலையத்திற்கு புறப்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள், இந்திய தூதரகத்தின் உதவியுடன் அங்கிருந்து நாடு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபரேஷன் கங்காவின் கீழ் பல மாணவர்கள் நாடு திரும்பியும் வருகின்றனர். இந்த நிலையில், போர் சூழலில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளை மெற்கொண்டிருந்த இந்திய மாணவர் கொல்லப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன்
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR