குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 29-வது சர்வதேச பட்டம் விடும் போட்டி தொடங்கியது. இவ்விழாவை சபர்மதி நதிக்கரையில் அம்மாநில முதலமைச்சர் விஜய் ருபானி தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநில அரசு சார்பில் ஒரு வார காலம் நடத்தப்படும் இவ்விழாவில் இங்கிலாந்து, தென்கொரியா, மலேசியா, சீனா உள்ளிட்ட 44 நாடுகளில் இருந்து 150 பட்டம் விடும் ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இது தவிர 18 இந்திய மாநிலங்களில் இருந்து 100 பேரும் இவ்விழாவில் கலந்து கொண்டு வண்ணமயமான பட்டங்களை விட்டு பார்வையாளர்களை பரவசப்படுத்த உள்ளனர். 8 நாட்கள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இவ்விழா நடைபெறவுள்ளது.
Assam: 5-day kite festival organised at the banks of Brahmaputra in Guwahati, concluded yesterday. The festival was a part of a campaign for clean riverbanks. pic.twitter.com/Aug8OdXb9U
— ANI (@ANI) January 9, 2018