நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை வெளிட முடியாது: உச்சநீதிமன்றம்

டிசம்பர் 12, 2018 அன்று கொலீஜியம் எடுத்த முடிவுகளின் விவரங்களைக் கோரி மனுதாரர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த RTI மனு உச்ச நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 9, 2022, 12:49 PM IST
  • டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த சிறப்பு மனு.
  • கொலிஜியத்தின் இறுதி முடிவு என்று அழைக்க முடியாது.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆலோசனை குறித்த விபரங்களை பொதுவில் வெளியிட முடியாது.
நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை வெளிட முடியாது:  உச்சநீதிமன்றம் title=

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொலிஜியத்தில், நீதிபதிகள் நியமன்ம் குறித்து என்ன ஆலோசனை செய்யப்பட்டது என்பதை அனைவரிடமும் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது. டிசம்பர் 12, 2018 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நீதிபதிகள் நியமனம் குறித்த விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ்  கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதற்குப் பதிலளித்த நீதிமன்றம், நீதிபதிகள் நியமனம்  குறித்த ஆலோசனை விபரங்களை பொதுமக்கள் மத்தியில் வெளியிட முடியாது என்றும், கொலீஜியத்தின் இறுதி முடிவை இணையதளத்தில் பதிவேற்றினால் போதும் என்றும் கூறியது.

இறுதி முடிவை மட்டுமே முடிவாகக் கருத முடியும் என்றும், அதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆலோசனை குறித்த விபரங்களை பொதுவில் வெளியிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. மனுதாரரான ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் 2018 டிசம்பரில், நீதிபதிகள் நியமனம் குறித்த கொலிஜியம் கூட்டம் தொடர்பான தகவல்களைக் கேட்டிருந்தார். கோரிக்கையை நிராகரித்த நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான நீதிமன்ற பிரிவு, 2018 டிசம்பர் 12 தேதியிட்ட கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜனவரி 10, 2019 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து தெரிகிறது.

மேலும் படிக்க | பஞ்சாபில் அதிகரிக்கும் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்: உச்ச நீதிமன்றம்

கொலிஜியத்தின் இறுதி முடிவு என்று அழைக்க முடியாது: நீதிபதி எம்.ஆர்.ஷா, "சில விவாதங்கள் நடக்கலாம், ஆனால் உரிய ஆலோசனைக்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்பட்டு இறுதி முடிவின் அடிப்படையில் தீர்மானம் தயாரிக்கப்படும் வரை, அது கொலீஜியத்தின் இறுதி முடிவு என்று கூற முடியாது. மேலும், “கொலிஜியம் நிறைவேற்றும் உண்மையான தீர்மானம் தான் கொலிஜியத்தின் இறுதி முடிவு என்று கூற முடியும். ஆலோசனையின் போது சில விவாதங்கள் நடந்தாலும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றால், கொலிஜியம் இறுதி முடிவு எடுத்ததாகக் கூற முடியாது என்றார்.

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த சிறப்பு மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா மற்றும் நீதிபதி சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. நிலையில், டிசம்பர் 12, 2018 அன்று நடந்த கூட்டத்தில் கொலிஜியம் எடுத்த முடிவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க | கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பிற்கு எதிரானது: உச்ச நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News