ஸ்வநிதி திட்டம் - 2024வரை தொடர மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 27, 2022, 09:27 PM IST
  • ஸ்வநிதி திட்டத்தை தொடர மத்திய அரசு ஒப்புதல்
  • 2024வரை தொடர ஒப்புதல்
  • டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது
ஸ்வநிதி திட்டம் - 2024வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் title=

சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி செய்யும் பிரதமர் தெரு வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் (PM Street Vendor’s AtmaNirbhar Nidhi) எனப்படும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் (PM Svanidhi) செயல்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் ரூ.10,000 வரை கடன் பெறலாம். இது தவிர, முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு இரண்டாவது முறை ரூ.20,000 கிடைக்கும். அந்த கடனையும் திருப்பி செலுத்திவிட்டால் மூன்றாம் முறையாக ரூ.50,000 கடனுதவி பெறலாம்.

Modi

இந்த திட்டமானது, கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பிறகு அதன் தாக்கத்தில் இருந்து சிறு வியாபாரிகளையும், தெருவோர கடை வைத்திருப்பவர்களையும் பாதுகாக்க தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தமிழக அரசு தான் காரணம் - பிரதமர் மோடி விமர்சனம்

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டட்தில் PM SVANIdhi திட்டத்தை 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை தொடர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஆண்களுக்கு கெட்-அவுட்..பெண்களுக்கு வெல்கம்..! டெலிவரி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News