EPFO: 8.1% வட்டி அளிக்கும் பாதுகாப்பான அரசாங்க திட்டம்

PF Interest Rate: இபிஎஃப்-ல் பங்களிக்கும் அனைத்து பணியாளர்களும் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2022, 12:16 PM IST
  • அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் பல சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இந்தத் திட்டங்களில் ஒன்று பிஎஃப் ஆகும்.
  • பிராவிடண்ட் ஃபண்டு, அதாவது பி.எஃப் மூலம், அரசு, வேலை செய்யும் மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
EPFO: 8.1% வட்டி அளிக்கும் பாதுகாப்பான அரசாங்க திட்டம் title=

பிஎஃப் வட்டி விகிதம்: நாட்டின் குடிமக்களுக்கு அரசாங்கத்தால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுத்துகின்றன. இந்த திட்டங்களில் ஏழை மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பல திட்டங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கும் அரசு சார்பில் பல சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் ஒன்று பிஎஃப் ஆகும். பிராவிடண்ட் ஃபண்டு, அதாவது பி.எஃப் மூலம், அரசு, வேலை செய்யும் மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேமிப்புத் தொகையை ஓய்வு காலத்தில் பயன்படுத்தலாம்.

எவ்வளவு வட்டி கிடைக்கும்

இபிஎஃப்-ல் பங்களிக்கும் அனைத்து பணியாளர்களும் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். கணக்கில் உள்ள நிலுவையைக் கண்டறிய, ஆண்டின் இறுதியில் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அவர்கள் தங்கள் முதலாளி அல்லது அலுவலகத்துக்காக காத்திருக்கத் தேவையில்லை. பணியாளர்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டுக்கு 8.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | EPFO விடுத்த மாபெரும் எச்சரிக்கை: கவனமாக இல்லையெனில் கடும் பாதிப்பு 

இவ்வளவு பங்களிக்க வேண்டும்

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஊழியர் தனது அடிப்படை வருமானத்தில் 12% ஐ பிஎஃப் கணக்கில் செலுத்துகிறார். மேலும் அதே தொகையை முதலாளி அல்லது நிறுவனமும் தங்கள் சார்பில் பங்களிக்க வேண்டும். இருப்பினும், ஊழியர்கள் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) மூலம் இதை விட அதிகமாக பங்களிக்க முடியும். VPF மற்றும் EPF மீதான வட்டி விகிதம் ஒன்றுதான். பிஎஃப் கணக்கில் இருப்பை சரி பார்க்கவோ, அல்லது வட்டித் தொகை வந்ததா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளவோ ஆன்லைன் செயல்முறையை பயன்படுத்தலாம். 

இபிஎஃப்ஓ போர்ட்டலில் இருந்து இபிஎப் இருப்பை சரிபார்க்க

- பாஸ்புக்கில் இபிஎஃப் இருப்பையும் செக் செய்ய முடியும். 

- பிஎஃப் இருப்பைச் சரிபார்க்க இபிஎஃப்ஓ போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். 

- முதலில் இபிஎஃப்ஓ போர்ட்டலில் லாக் இன் செய்யவும். 

- இதற்குப் பிறகு, அங்குள்ள 'மெம்பர் பாஸ்புக்' என்பதைக் கிளிக் செய்யவும். 

- இங்கு, உங்களுக்கு கிடைத்த வட்டித் தொகையுடன் அனைத்து பிஎஃப் பணப் பரிமாற்றத்தின் விவரங்களையும் காணலாம். 

மேலும் படிக்க | EPFO செய்துள்ள மிகப்பெரிய மாற்றம்! இத்தனை பேருக்கு நேரடி பயனா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News