திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் இனி பிரசாத லட்டுவை பேக் செய்ய சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான மக்கும் பைகள் பயன்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இதனை தயாரித்துள்ளது.
DRDO தலைவர் சதீஷ் ரெட்டி அவர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) செயல் அலுவலர் டாக்டர் கே. ஜவஹர் ரெட்டி மற்றும் கூடுதல் EO A.V. தர்ம ரெட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) திருமலையில் இதற்கான ஒரு பிரத்யேக விற்பனை கவுண்டரைத் திறந்து வைத்தார்.
பின்னர் லட்டு விநியோக வளாகத்தில் உள்ள புதிய கவுண்டருக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய DRDO தலைவர், ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகம், இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அபாயகரமான பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று வழிகளை கண்டுபிடித்து வருவதாக கூறினார்.
ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
"ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கை குறைக்க, 90 நாட்களுக்குள் இயற்கையாக சிதைந்து, கால்நடைகள் அவற்றை உட்கொண்டாலும் தீங்கு விளைவிக்காத சோள மாவுச்சத்தால் ஆன இந்த சுற்று சூழலுக்கு உகந்த பைகளை நாங்கள் தயாரித்துள்ளோம். திருப்பதி பிரசாத லட்டுவிற்காக நாங்கள் இந்த பைகளை தயாரித்துள்ளோம், "என்றார்.
பெட்ரோ கெமிக்கல்களிலிருந்து தயாரிக்கப்படும் வழக்கமான பாலிஎதிலீன் பைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அல்ல. அவை மாசுபடுத்துகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆகும் என்று அவர் கூறினார். மாறாக, டிஆர்டிஓ தயாரித்துள்ளட் இந்த பைகள் அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான, குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இந்த பொருள், சுற்றுசூழலை பாதிக்காது என்று அவர் கூறினார்.
டிஆர்டிஓ அறிமுகப்படுத்தியுள்ள மக்கும் பைகள் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்பதோடு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை என்று TTD அதிகாரி கூறினார். "உயிரினங்கள் சிறப்பாக உயிர் வாழ்வதற்கு இது போன்ற தயாரிப்புகள் இன்றியமையாதவை. சில நாட்களாக பக்தர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, முழுமையான அளவில் இதனை தொடங்க திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.
ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR