மேகாலயாவில் ஆட்சி அமைக்கு பாஜக-வின் வடகிழக்கு கூட்டணி அனுமதி கோரிய நிலையில் பாஜக ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி வரும் 6-ம் தேதி ஆட்சி அமைக்கிறது!
59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில், காங்கிரஸ் 21 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களையும் கைப்பற்றின. ஐக்கிய ஜனநாயக கட்சி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்றன.
மேகாலயாவில் ஆட்சியமைக்க 31 இடங்கள் வேண்டிய நிலையில் எந்த கட்சியும் தனி பெரும்பான்மை அடயாத நிலையில் அங்கு தொங்கும் ஆட்சி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சியை தக்க வைக்க 21 இடங்களைக் கொண்ட காங்கிரஸ் போராடி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.
இதனையடுத்து பா.ஜ.க. வேண்டுகோளை ஏற்று தேசிய மக்கள் கட்சிக்கே ஆதரவு அளிக்க ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவர் டான்குபர் ராய் முடிவு செய்துள்ளார். HSPDP கட்சியும், மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர்.
இதனையடுத்து பாஜக ஆட்சி அமைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க அழைக்குமாறு மேகாலய ஆளுநர் கங்கா பிரசாத்திடம் கடிதம் அளித்துள்ளார்.
இந்நிலையில் வரும் 6-ஆம் தேதி தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா தலைமையில் ஆட்சி அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!