ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: Rahul Gandhi - Sachin Pilot இடையே தொலைபேசி உரையாடல்

ராஜஸ்தானின் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸின் உயர் மட்ட அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Last Updated : Jul 12, 2020, 08:30 PM IST
  • ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடியை தீர்க்க உயர் மட்ட அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன
  • பாஜக வில் இணைந்துள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, ராஜஸ்தான் நிகழ்வுகள் குறித்து ட்வீட் செய்துள்ளார்
  • அசோக் கெஹ்லோட் சுயேச்சை இன்று இரவு 9 மணிக்கு முதல்வரின் இல்லத்தில் நடக்கும் கூட்டத்திற்கு எம் எல் ஏக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: Rahul Gandhi - Sachin Pilot இடையே தொலைபேசி உரையாடல் title=

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்காக ராகுல் காந்தி சச்சின் பைலட் இருவரும் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினர்.

புதுடில்லி (New Delhi): ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராகுல் காந்தி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

ALSO READ | கெஹ்லாட் அரசுக்கு நெருக்கடி! முதல்வர், பைலட், சுயேச்சைகளுக்கு காவல் துறை நோட்டீஸ்

இது குறித்து ஆலோசனை செய்ய ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12, 2020) மாலை 5.30 மணிக்கு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள சச்சின் பைலட்டை அழைத்தார், ஆனால் ராகுல் காந்தியின் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட நேரத்தில், சச்சின் பைலட் வரவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சச்சின் பைலட்டுடன் ராகுல் காந்தி தொலைபேசி மூலம் உரையாடியதாக, நடத்தப்படுவதாக ராகுல் காந்தியின் அலுவலகம் கூறி வருகிறது. மேலும் இந்த பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கவும், ராஜஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து அவருக்குக் எடுத்து கூறவும் பைலட் இன்று டெல்லிக்கு வந்தார்.

ALSO READ இந்தியாவுடான எல்லை மோதலுக்கு சீனா கொடுத்த விலை என்ன…!!!

தன்னை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க கட்சி திட்டமிட்டுள்ளதாக பைலட் சந்தேகிப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கெஹ்லோட் அவரை ஓரங்கட்ட விரும்புகிறார்  என்பதால், தான் அதிருப்தியுடன் இருப்பதை, கட்சி தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என பைலட் கருதுகிறார்.

பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணையலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பாஜக வில் இணைந்துள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, ராஜஸ்தான் நிகழ்வுகள் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். "எனது நண்பராக இருந்த சச்சின் பைலட்டும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட்டால் ஓரங்கட்டப்படுவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. திறமையாக இருப்பவர்களுக்கு காங்கிரஸில் இடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது." என அவர் ட்வீட் செய்துள்ளார்.

மார்ச் மாதத்தில், சிந்தியாவையும் சோனியா காந்தி, ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். ஆனால் அவர் கூட்டத்தில் கல்ந்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்திருந்தார். பின்னர் சிந்தியாவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் காங்கிரஸை விட்டு வெளியேறி, மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான அரசை வீழ்த்தி பாஜகவுடன் இணைந்தனர்.

இந்நிலையில், கெஹ்லோட் அனைத்து காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் இன்று இரவு 9 மணிக்கு முதல்வரின் இல்லத்தில் நடக்கும் கூட்டத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.

Trending News