Rice Export Ban: அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த அரசு, ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தது தெரியுமா?

Rice Export Ban in India: வெளிநாடு வர்த்தக பொது இயக்குனரகத்தின் (DGFT) அறிவிப்பின்படி, மத்திய அரசு ஜூலை 20 அன்று பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 20, 2023, 08:04 PM IST
  • பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை
  • சில நிபந்தனைகளுடன் ஏற்றுமதி அனுமதிக்கப்படும்
  • நாட்டில் அரிசி விலை 10 நாட்களில் 20% அதிகரித்துள்ளது.
Rice Export Ban: அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த அரசு, ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தது தெரியுமா? title=

புதுடெல்லி: பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பானத் தகவலை அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாட்டில் அரிசியின் விலை உயர்வை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் சில நிபந்தனைகளுடன் அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும். இந்த அறிவிப்புக்கு முன்பே கப்பல்களில் அரிசி ஏற்றும் பணி தொடங்கப்பட்டிருந்தால், அதன் ஏற்றுமதி அனுமதிக்கப்படும். மேலும் ஏற்கனவே பிற நாடுகளுக்கு அனுமதி வழங்கி இருப்பதால், அவர்களுக்கு அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்படும். அதாவது அந்தந்த நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இத்தகைய அனுமதியை வழங்கியுள்ளது. நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக உணவு மற்றும் தானியங்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. கோதுமை, அரிசி, பால், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டும் நாடு முழுவதும் அரிசியின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

சில நிபந்தனைகளின் கீழ் அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி..
எவ்வாறாயினும், அரிசி ஏற்றுமதிக்கு நான்கு வெவ்வேறு நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்கப்படுகின்றன. ஷிப்பிங் பில் தாக்கல் செய்யப்பட்டு, கப்பல்கள் ஏற்கனவே வந்து இந்திய துறைமுகங்களில் நங்கூரமிட்டு இருப்பதால் அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். ஏனென்றால் வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய தடை என்ற மத்திய அரசு அறிவிப்புக்கு முன் அவற்றுக்கான சுழற்சி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அறிவிப்புக்கு முன்னரே பாஸ்மதி அல்லாத அரிசி சரக்குகள் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் அமைப்பில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால் அவை அனுமதிக்கப்படும்.

மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.

மேலும் படிக்க - Manipur Violence: மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர சம்பவத்திற்கு காரணமான ஒருவர் கைது!

உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பு..
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோதுமை, அரிசி, பால், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

மழைக் காரணமாக பயிரிடுவது குறைந்துள்ளது..
பருவமழை பொய்த்ததால், நெல், பயறு விதைப்பு குறைந்துள்ளது. ஜூலை 14 வரையிலான தரவுகளின்படி, கோதுமை பயிரிடுவது இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. நெல் சாகுபடி பயிரிடுவது 6.1 சதவீதமாகவும், பருப்பு வகைகள் 13.3 சதவீதமாகவும் உள்ளது. ஏனெனில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. மேற்கு வங்கம் நெல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா தற்போது நாட்டின் பருப்பு வகைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பயிரிடுகிறது. பருப்பு மற்றும் நெல் விதைப்புக்கு அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானவை. உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா. கடந்த ஆண்டு செப்டம்பரில், உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது. மேலும், பல்வேறு வகையான அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் அரிசியின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது..
முன்னதாக ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்றில், பெரும்பாலான அரிசி வகைகளின் ஏற்றுமதியை தடை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக நாட்டின் 80 சதவீத அரிசி ஏற்றுமதி பாதிக்கப்படலாம். இதன் காரணமாக நாட்டில் அரிசி விலை குறையும். ஆனால் உலக அளவில் அரிசியின் விலை அதிகரிக்கலாம். கடந்த பத்து நாட்களில் நாடு முழுவதும் அரிசியின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் நெல் விளையும் மாநிலங்களில் மழை சரியாக பெய்யாததே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - I.N.D.I.A: கூட்டணியின் பெயரை ‘இந்தியா’ என வைத்ததால் சிக்கலில் சிக்கிய எதிர்க்கட்சிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News