உ.பி அரசின் செயல் முற்றிலும் சட்டவிரோதமானது, இழப்பீடு வழங்க வேண்டும் -முன்னாள் தலைமை நீதிபதி

இது ஏதோ சாதாரணமாக சட்ட விதிகளை மட்டும் மீறப்பட்டதாக இல்லை என்றும், இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது வேண்டுமென்றே சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது - உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர்

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 15, 2022, 08:53 PM IST
உ.பி அரசின் செயல் முற்றிலும் சட்டவிரோதமானது, இழப்பீடு வழங்க வேண்டும் -முன்னாள் தலைமை நீதிபதி title=

புதுடெல்லி: ஒருவர் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது வீட்டை இடிப்பது நியாயமற்றது, இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவொரு குற்றத்திற்காகவும் யாருடைய வீட்டையும் இடிக்க முடியாது. இதுபோன்ற தண்டனை ஐபிசியில் குறிப்பிடப்படவில்லை. 'சிறை, அபராதம் விதிக்கலாம், அது வேறு விஷயம். ஆனால் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை என உ.பி அரசின் செயல்பாடுகளை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி கோவிந்த் மாத்தூர் தி வயர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வாருங்கள் மேலும் நீதிபதி கோவிந்த் மாத்தூர் அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். அதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம். முகமது நபி குறித்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும் ஜூன் 10 வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பிறகு நாடு முழுவதும் பல நகரங்களில் அமைதியாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஒரு கட்டத்தில் அமைதியாக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. கல்வீச்சு, தடியடி மற்றும் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. 

அதன்பிறகு ஜூன் 10 அன்று சஹாரன்பூரில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகள் சனிக்கிழமை (ஜூன் 11) புல்டோசர்களைக் கொண்டு காவல்துறையினரால் இடித்துத் தள்ளப்பட்டன. அதேபோல கான்பூரில், முகமது இஷ்தியாக்கின் வீட்டையும் போலீசார் இடித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) அன்று முகமது வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் அஃப்ரீன் பாத்திமாவின் வீடும் இடிக்கப்பட்டது.

இனி ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்த் மாத்தூர் கூறியது:

முகமது வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் மகள் ஒரு மாணவி. ஜாவேத் முகமதுவின் மனைவி பெயரில் உள்ள அவரது வீடு, கட்டுமான விதிகளை மீறியதாகக் கூறி, அலகாபாத் மேம்பாட்டு ஆணையத்தால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது. ஜாவேத் முகமதுவின் வீட்டை இடிக்க அதிகாரிகள் கூறிய காரணங்கள் என்னவாக இருந்தாலும் சரி. ஆனால் அந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. இதற்கு காரணமாக அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் செய்த செயலுக்கு சட்டவிதிகள் படி தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

ஜாவேத் வெள்ளிக்கிழமை அலகாபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாவேத் முகமதுதான் இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாகவும், இதற்காகவே அவரது வீடு நாசவேலைக்கு இலக்காகி இருப்பதாகவும் போலீசார் கூறினர்.

இது சட்டவிரோதமானது
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஏப்ரல் 2021 இல் ஓய்வு பெற்ற நீதிபதி மாத்தூர் கருத்துப்படி, அவ்வாறு செய்வது இந்தியச் சட்டத்தில் குறிப்பிடப்படாத ஒரு வகையான தண்டனையாகும், எனவே இது சட்டவிரோதமானது என்றார்.

இந்தச் செயலானது மிகவும் தவறு மற்றும் வருத்தமும் அளிப்பதாக இருக்கிறது எனக்கூறிய அவர்,  இது ஏதோ சாதாரணமாக சட்ட விதிகளை மட்டும் மீறப்பட்டதாக இல்லை என்றும், இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது வேண்டுமென்றே சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது எனக் கூறினார். நாகரீக சமுதாயத்தில் எது நடக்கக் கூடாதோ, அதுவே நடந்துள்ளது.

மேலும் அவர் மேலும் கூறுகையில், ஜாவேத் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தாலும், குற்றச் செயல் என்று நாங்கள் கருதும் சில செயல்பாடுகள் அவர் செய்திருந்தாலும், அவர்களின் வீட்டை இடிப்பது போன்ற நடவடிக்கை எடுக்க முடியாது. முதலில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், சாட்சியங்கள் சேகரிக்கப்பட வேண்டும், அவற்றின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை முடிவு செய்ய வேண்டும், சலான் பதிவு செய்யப்படும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விசாரணை நடக்கும். அவர் மீது குற்றம் இருந்தால் தான் அவருக்கு தண்டனை வழங்க முடியாது. அதுவும் சட்டத்துக்கு உட்பட்டு IPC-ல் எழுதப்பட்ட தண்டனை தான் வழங்க முடியும். 

இந்த மாதிரி சட்டமும் காவல்துறையும் தேவையில்லை
ஒருவர் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அவர் வீட்டை இடிப்பது "தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு" என்றும், நாங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுப்போம் மற்றும் இஷ்டம் போல தண்டிபோம் என்ற மனநிலையில் இருக்கும் 'இந்த மாதிரி சட்டமும் காவல்துறையும் தேவையில்லை. அவர்கள் குற்றச் செயல்களின் ஈடுபட்டதால் தான், அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது என்பது நியாயமற்றது, இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

எந்தவொரு குற்றத்திற்காகவும் யாருடைய வீட்டை இடிக்க முடியாது என்றும், அத்தகைய தண்டனை ஐபிசியில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார். 'சிறை, அபராதம் விதிக்க வேண்டும், அது வேறு விஷயம், ஆனால் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை.

குடும்பத்தின் இழப்புக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
வீட்டை இடிப்பது அல்லது சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகல் எடுக்கும் முன்பு ஒரு முழுமையான செயல்முறை உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த உள்ளூர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன என்று கூறினார். எந்த செயல்முறை பின்பற்றப்படாவிட்டால் அது சட்டவிரோதமானது. எந்தவொரு சட்டவிரோத கட்டுமானம் அல்லது ஆக்கிரமிப்பு, அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்படும், ஆனால் சில செயல்முறைக்குப் பிறகு, அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அதற்கு நகராட்சி சட்டங்கள் உள்ளன, அதன் கீழ் வழக்கமாக அபராதம் விதிக்கப்படும். 

எவ்வாறாயினும், வீட்டின் உரிமையாளரை உரிய மன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையான அறிவிப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார். 

சில வாரங்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பட்டதாக கூறப்படுகிறது. அனால் ஜாவேத் முகமது, சொத்துக்கு சொந்தக்காரர் அல்ல. எனவே இது சட்டவிரோத கட்டுமானம் என்று கூறப்பட்டாலும், உரிமையாளருக்கு முறையான அறிவிப்பை வழங்காததால், இடிப்பு சட்டவிரோதமாக இருக்கும் என்பது தெளிவாகிறது என்றார்.

இந்த வழக்கில் அதிகாரிகளிடம் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் பெறவில்லை என்று ஜாவேத்தின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

தேவையற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி மாத்தூர் கூறினார். "நாசவேலைச் செயல் சட்டவிரோதமானது என்றால், குடும்பத்தின் இழப்புக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த தொகையை இந்த நடவடிக்கை எடுத்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றார்.

மக்கள் சிந்தித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்
இந்த இடிப்பு நடவடிக்கைகளால் நாட்டில் உள்ள முஸ்லிம்களின் மனதில் எதிர்காலம் குறித்த அச்சம் குறித்து நீதிபதி மாத்தூர் கூறுகையில், “இது சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு சமூகமும் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால் அது முழு நாட்டின் குடிமக்களுக்கும் கவலையளிக்கும் விஷயம். இப்போது பல குரல்கள் அமைதியாக இருக்கும். இருக்கிறது. ஆனால் ஆதற்காக மக்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை என்று அர்த்தம் இல்லை என்றார்.

இந்திய நீதித்துறையின் மீது தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், ஜாவேத் முகமது மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News