பரேலி: கோவம் ஒரு மனிதனை எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட வைக்கும்? கோவத்தின் உச்சம் வன்முறையா? நிதானம் இழந்தால் நாம் நம் நன்மதிப்புகளையும் இழந்து விடுகிறோமா? ஆம்!! இதுதான் உண்மை. இதற்கு தினமும் பல சம்பவங்கள் சாட்சியங்களாக நம்முன் வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.
உத்தரபிரதேசத்தின் (Uttar Pradesh) புடான் மாவட்டத்தில் 56 வயதான தலித் விவசாயி (Dalit Farmer) ஒருவர் தண்ணீர் குழாய் பகிர்ந்து கொள்ள மறுத்ததால் அடித்து கொல்லப்பட்டார். அந்த நபரின் தலையை அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு விவசாயி துண்டித்ததாக கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகள் சிலர் சம்பவ இடத்திற்கு விரைந்த பின்னரும் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த விவசாயியைத் தாக்குவதை நிறுத்தவில்லை.
உயிரிழந்தவர் நாத்து லால் ஜாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். திங்களன்று ரூப் கிஷோர் என்பவர் ஜாதவின் தலையை துண்டித்ததாகக் கூறப்படுகிறது. அவர் புடானிலிருந்து (Budan) 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தின் நகர் ஷெய்க்பூர் கிராமத்தில் ஒரு சிறிய விவசாயியாக இருந்தார்.
சம்பவம் நடந்த அன்று, கிஷோர் ஜாதவிடம் நீர்ப்பாசனத்திற்காகப் பயன்படுத்தும் குழாய்களில் ஒன்றிலிருந்து தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டார். ஜாதவ் அதை செய்ய மறுத்துவிட்டார். இதனால் கிஷோருக்கு மிக அதிகமாக கோவம் வந்தது. கிஷோர் ஜாதவை திட்டத் துவங்கினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ALSO READ: UP Horror: குழந்தை ஆணா பெண்ணா என அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த கணவன்!!
குற்றம் சாட்டப்பட்ட ரூப் கிஷோர், ஜாதவை அடித்து மண்வெட்டி கொண்டு அவர் தலையை துண்டித்தார்.
கிஷோர் ஜாதவை ஒரு கம்பால் அடிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் சிலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த நேரத்தில், கிஷோர் ஒரு மண்வெட்டியைக் கண்டு ஜாதவைத் தாக்கினார். கிஷோர் 56 வயதான விவசாயி ஜாதவின் தலையை மண்வெட்டியால் துண்டித்தார்.
நேரில் பார்த்தவர்கள் பயத்துடன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறினர். இறந்தவரின் மகன் ஓம்பால், அவர் தனது தந்தையுடன் மாலையில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், இரவு உணவிற்காக தான் வீட்டிற்கு வந்தபோது, ரூப் கிஷோர் தன் தந்தையை அணுகியுள்ளதாகவும் கூறினார். ஓம்பல் மேலும் கூறுகையில், "நள்ளிரவில், மஹிந்தர் (ஒரு உள்ளூர்வாசி) எங்கள் வீட்டிற்கு வந்து ரூப் கிஷோர் என் தந்தையை கொலை செய்ததாக என்னிடம் கூறினார். அவர் சொன்னது தவறாக இருக்க வேண்டும் என்று எண்ணியபடியே நான் அங்கு விரைந்தேன். எனது தந்தையின் தலை துண்டிக்கப்பட்ட உடல் வயல்களில் கிடப்பதை நான் கண்டேன்." என்றார்.
தனது தந்தையின் கொலையில் மற்றவர்களும் ஈடுபட்டுள்ளதாக ஓம்பல் குற்றம் சாட்டினார். பிரதான குற்றவாளியும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். எனினும், கிஷோரை அருகிலுள்ள காட்டில் போலீசார் (UP Police) கண்டுபிடித்தனர். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ALSO READ: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலையை துண்டாக வெட்டி எறிந்த கொடூரம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR