விண்வெளித்துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்..!
டெல்லி: 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அரசு வங்கிகள், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேற்பார்வை அதிகாரங்களுக்கு உட்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்துடன், உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
#Cabinet approves declaration of #Kushinagar airport in Uttar Pradesh as an international airport - Union Minister @PrakashJavdekar #CabinetDecisions pic.twitter.com/jwXZvCIT00
— PIB India (@PIB_India) June 24, 2020
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்... "அரசு வங்கிகள், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பல மாநில கூட்டுறவு வங்கிகள், இனி மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். மேலும், ரிசர்வ் வங்கி கொண்டிருக்கும் அதிகாரங்கள், இந்த கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என்று பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவசரச் சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
READ | COVID-19-னை குணப்படுத்தும் என கூறப்பட்ட கொரோனில் மாத்திரை தடை செய்யப்படலாம்...
இதன் மூலம் இந்த 1540 வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் 8.6 கோடி முதலீட்டாளர்களின் ரூ.4.48 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.