முழுஅடைப்பின் காரணமாக தனது பெற்றோரின் வீட்டில் சிக்கியிருந்த மனைவி மாயமான நிலையில் உத்திரபிரதேச ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் புதன்கிழமை கோண்டாவில் உள்ள ராதா குண்ட் வட்டாரத்தில் நடைப்பெற்றது எனவும், இறந்தவர் பெயர் ராகேஷ் சோனி எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தகவல்களின்படி, சோனியின் மனைவி தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தனது பெற்றோர் வீட்டில் சிக்கிக்கொண்டார். சில நாட்கள் கழித்து அவர் மாயமாகியுள்ளார், இதனால் வருத்தம் கொண்ட சோனி தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் என்று இன்ஸ்பெக்டர் அலோக் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 24 (செவ்வாய்க்கிழமை) அன்று, அன்றைய நாள் இரவு துவங்கி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழுஅடைப்பு அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் சுழற்சியை உடைக்க இந்த 21 நாட்கள் முழுஅடைப்பு அவசியம் என்று பிரதமர் கூறியிருந்தார். இந்த 21 நாட்கள் நீடிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து போகும் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்த முழுஅடைப்பினை ஊரடங்கு உத்தரவாகக் கருதுங்கள். இந்தியாவைக் காப்பாற்ற, ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்ற, உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற, வீடுகளை விட்டு வெளியேற முழுமையான தடை உள்ளது என்று பிரதமர் மோடி தனது பெயரில் தேசத்திடம் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு யூனியன் பிரதேசத்திலும் இந்த முழு அடைப்பு பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது இந்த முழு அடைப்பு உத்திரபிரதேசத்தில் ஒரு குடும்பத்தை பழாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.