PoK-வை முதலில் காலி செய்யுங்கள்: UNGA-வில் பாகிஸ்தானுக்கு இந்தியா காட்டமான பதில்

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதையும், உதவி மற்றும் உறுதியான ஆதரவை அளிப்பதையும் பாகிஸ்தான் தனது அரசாங்க கொள்கையாகவே கொண்டுள்ளது என்பதை உறுப்பு நாடுகள் அறிந்திருக்கின்றன.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 25, 2021, 10:33 AM IST
  • ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச் சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
  • பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது பாகிஸ்தானுக்கு வாடிக்கையாகிவிட்டது.
  • ஆப்கானிஸ்னானில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பாகிஸ்தானை கண்டித்துள்ளார்.
PoK-வை முதலில் காலி செய்யுங்கள்: UNGA-வில் பாகிஸ்தானுக்கு இந்தியா காட்டமான பதில்

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச் சபை கூட்டம் (UNGA) அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வர்சுவல் உரையை நிகழ்த்தினார். வழக்கம் போல, இம்முறையும், இம்ரான் கான் இந்தியா குறித்த பொய்யான மற்றும் தீங்கிழைகும் வகையிலான பல கருத்துகளை வெளிப்படுத்தினார்.

இதற்கு இந்திய தூதாண்மை பிரதிநிதி ஸ்நேகா தூபே. முறையான மற்றும் உறுதியான பதிலை அளித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ராக் கானுக்கு இந்தியா சார்பில் ஸ்னேஹா தூபே அளித்த பதிலில், “துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தானின் (Pakistan) தலைவர் ஐநா வழங்கும் முக்கிய தளங்களை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், தவறாகப் பயன்படுத்துவதும், எங்கள் நாட்டுக்கு எதிராக பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை முன்வைப்பதும் வழக்கமாகிவிட்டது. இவற்றின் மூலம், பயங்கரவாதிகள் இலவச பாஸ் அனுபவிக்கும் நிலையில் இருக்கும் தங்கள் நாட்டின் நிலையிலிருந்து உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் வீணாக முயற்சிகிறது” என்று கூறினார்.

இம்ரான் கான் (Imran Khan) தனது மெய்நிகர் உரையின் போது, ​​காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதோடு இந்திய அரசையும் விமர்சித்தார். இவ்வாறு அவர் தனது பல சமீபத்திய உரைகளில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இந்தியாவின் தடுப்பூசி போடும் வேகம் வியப்பளிக்கிறது: கமலா ஹாரிஸ்

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதையும், உதவி மற்றும் உறுதியான ஆதரவை அளிப்பதையும் பாகிஸ்தான் தனது அரசாங்க கொள்கையாகவே கொண்டுள்ளது என்பதை உறுப்பு நாடுகள் அறிந்திருக்கின்றன என்பதை இந்திய பிரதிநிதி கூறினார். மேலும், சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"உலக அளவில், பயங்கரவாதிகளை வெளிப்படையாக ஆதரிப்பது, பயிற்சி அளிப்பது, நிதியளிப்பது மற்றும் ஆயுதங்கள் அளிப்பது என அனைத்தையும் பாகிஸ்தான் செய்கிறது என்பதை உலக நாடுகள் அறியும்” என்று துபே கூறினார்.

"ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களின் அனைத்து பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருந்தன, எப்போதும் இருக்கும். இதில் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளும் அடங்கும். பாகிஸ்தான் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் உடனடியாக வெளியேறுமாறு நாங்கள் பாகிஸ்தானை கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் (Afghanistan) பாகிஸ்தானின் தலையீடு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பாகிஸ்தானை கண்டித்துள்ளார். வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இந்தியாவின் அண்டை நாடுகளில் பிரச்சனைகளை தூண்டி விடுவதாக பாகிஸ்தானை குற்றம் சாட்டினார்.

ALSO READ: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News