நேற்று எருமை மாடு; இன்று பசு மாடு - 'வந்தே பாரத்... விடாது விபத்து..'

காந்திநகர் - மும்பை செல்லும் வந்தே பாரத் ரயில், தொடர்ந்து இரண்டாவது நாளாக விபத்துக்குள்ளாக்கியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 7, 2022, 08:27 PM IST
  • நேற்று மோதிய 6 எருமை மாடுகளும் பலி
  • இன்று மோதிய பசு மாடு குறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
  • இந்த விபத்து தவிர்க்க இயலாதது - ரயில்வே அமைச்சர்
நேற்று எருமை மாடு; இன்று பசு மாடு - 'வந்தே பாரத்... விடாது விபத்து..' title=

குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் நேற்றைப்போல, இன்றும் விபத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று, ரயில் தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் புகுந்த நிலையில், இன்று பசுமாடு ஒன்று விபத்துக்கு காரணமாகியுள்ளது. நேற்றைய விபத்தில் 6 எருமை மாடுகள் உயிரிழந்த நிலையில், இன்று மோதிய பசு மாடு குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. 

ஃபைபர் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன ரயில் பகுதி நேற்று சேதாரமான நிலையில், அது சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து, இன்றைய விபத்தால், ரயிலின் முகப்பு பகுதி சிறிது நெழிந்துள்ளது. தொடர்ந்து, நேற்றைய விபத்திற்கு காரணமான எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே தரப்பில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் மீண்டும் பசுமாடால் விபத்தாகியுள்ளது. 

மேலும் படிக்க | Watch: சின்னாப்பின்னமான ரயில் - போன வாரம்தான் பிரதமர் தொடங்கிவச்சாரு; மோதிய மாடுகளுக்கு என்னாச்சு?

நேற்று எட்டு நிமிடங்களில் ரயில் புறப்பட்ட நிலையில், இன்று விபத்து ஏற்பட்ட 10ஆவது நிமிடத்தில் ரயில் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குஜராத்தின் காந்திநகரில் இருந்து 100 கி.மீ., தூரத்தில் இருக்கும் ஆனந்த ரயில் நிலையம் அருகே இன்று மாலை 4 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயிலில் எருமை மாடுகள் மோதியது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,"மாடுகள் ரயில்களில் மோதுவது தவிர்க்க இயலாதது. இதையெல்லாம், ஆலோசித்துதான் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முகப்பு பகுதியை எளிதாக மாற்றிவிடலாம்" என தெரிவித்தார். 

இரண்டு மாநிலங்களின் தலைநகரங்களுக்கு இடையே செல்லும் இந்த அதிவேக அதிவிரைவு ரயில், கடந்த செப். 30ஆம் தேதி பிரதமர் மோடியால் குஜராத்தில் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது. இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்களில், இது மூன்றாவது வழித்தடமாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என கடந்தாண்டு சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று மொத்தம் 75 ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் உட்சபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ., என்றும்,  52 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை அதனால் எட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலால் வேகத்தை சீராக குறைக்கவும் முடியும் அதிகரிக்கவும் முடியும் என்பதால், பயண நேரம் வெகுவாக குறைகிறது. உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான ரயில்களில் செல்ல எட்டு மணிநேரமாகும். ஆனால், வந்தே பாரத் ரயில், சென்னை - மதுரை செல்லும் மற்ற அனைத்து ரயில்களையும் விட 40-50% (சுமார் 4 மணிநேரம்) விரைவாக சென்றுவிடும். 

மேலும் படிக்க |  ஓலா, ஊபருக்கு தடை - அதிக கட்டணம் வசூலிப்பதால் அதிரடி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News