பாலிவுட் பிளாக்பஸ்டர் ‘3 Idiots’ படத்தின் ரீமேக்கான விஜய்யின் ‘நன்பன்’ படம் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்த படம் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டது. மேலும் விஜய் (Actor Vijay) அருமையான நடிப்பை வெளிப்படுத்திய மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இது போற்றப்படுகிறது.
இந்த திரைப்படத்தில், ஒரு அவசர நிலை ஏற்பட்டு, விஜய், தனது சக விடுதி தோழர்களின் உதவியுடன், ஒரு பெண்ணிற்கு குழந்தையை பிரசவிக்க உதவுவார். இதில், இலியானா மருத்துவராக நடித்திருப்பார். மருத்துவர்களுடன் வீடியோ காலில் வழி நடத்தப்பட்டு விஜய்யும் அவரது நண்பர்களும் குழந்தையை இந்த பூமிக்குக் கொண்டு வருவார்கள். இந்த காட்சி அனைவராலும் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டு பேசப்பட்ட ஒரு காட்சியாகும்.
இப்போது, திரையில் வந்த இந்த காட்சி நிஜமாகிவிட்டது. கர்நாடகாவில் (Karnataka) ஒரு பெண்ணுக்கு இந்த வழியில் தான் குழந்தை பிறந்துள்ளது.
ALSO READ: கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!!
கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி எடுத்தது. தற்போதைய COVID நெருக்கடி மற்றும் அதனால் விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக, அவரால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. இருப்பினும், அண்டை வீட்டார் அவர் உதவிக்கு வந்தனர். ஒரு வீடியோ அழைப்பு மூலம் ஒரு மருத்துவர் அவர்களுகு உதவினார். மருத்துவரின் வழிகாட்டுதலின் படி செய்து, உதவிக்கு வந்த மக்கள் அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்து, வெற்றிகரமாக குழந்தையை பூமிக்கு கொண்டு வந்தனர்.
நல்ல செய்தி என்னவென்றால், தாயும் சேயும் மிகவும் நலமாக உள்ளார்கள். ஆம்! இங்கும் எல்லாம் “All is well” தான்!!