குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இருநாட்டு பிரதமர்: வீடியோ காட்சி

Last Updated : Sep 13, 2017, 06:57 PM IST
குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இருநாட்டு பிரதமர்: வீடியோ காட்சி title=

இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அவரது மனைவி அரசு முறை பயணமாக இன்று குஜராத் வந்தனர்.

அவர்களை பிரதமர் மோடி வரவேற்றனர். அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியும் மற்றும் ஜப்பான் பிரதமர், அவரது மனைவி குஜராத்தில் அமைத்துள்ள சபர்மதி ஆசிரமம் சென்றனர். அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

Trending News